• Nov 26 2024

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை; இரு நீதிபதிகள் விலகல்...!

Chithra / Jun 27th 2024, 4:35 pm
image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வெலிகம மாநகர சபையின் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில, நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் குமுதினி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். 

இந்த வழக்கு ஒகஸ்ட் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை; இரு நீதிபதிகள் விலகல். முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு வெலிகம மாநகர சபையின் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில, நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் குமுதினி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த வழக்கு ஒகஸ்ட் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement