• Nov 26 2024

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு...!samugammedia

Sharmi / Feb 6th 2024, 10:23 am
image

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை 120 அடியை விட 13 அடி குறைந்து இன்றைய தினம் 107 நீர் உள்ளது.

காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டும் அதன் கொள்ளளவை விட 8 அடி குறைந்து உள்ளது ஏனைய நீர் தேக்கங்களான கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல,விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மலையக பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு.samugammedia நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை 120 அடியை விட 13 அடி குறைந்து இன்றைய தினம் 107 நீர் உள்ளது.காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டும் அதன் கொள்ளளவை விட 8 அடி குறைந்து உள்ளது ஏனைய நீர் தேக்கங்களான கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல,விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தொடர்ந்து மலையக பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement