• Nov 24 2024

கற்பிட்டி கண்டகுழி களப்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நீர்ச் சறுக்கல் விளையாட்டு...!

Sharmi / Feb 20th 2024, 8:41 am
image

கற்பிட்டி கண்டகுழி களப்பில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்  நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்பொழுது கற்பிட்டிக்கு வருகைத் தந்துள்ள அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கண்டக்குழி பகுதியில் kite Surfing எனப்படும் நீர்ச்சறுக்கல் விளைட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 

இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே kite Surfing  மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச் சறுக்கல்  விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு கற்பிட்டி கண்டகுழி கலப்பு ஆழமற்று காணப்படுவதினால் விளையாற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிக இலகுவாக காணப்படுவதாகவும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில், குறித்த நீர்ச் சறுக்கல்  விளையாட்டில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த இடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

பலத்த காற்று வீசுவதுடன், தினமும் மதியம் 12 மணி முதல் 4.30 மணி வரை காற்று அதிகமாக உள்ளதால், இந்த விளையாட்டுக்கு மிகவும் சிறந்தது என அந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினர் குறிப்பிடுகின்றனர்

ஜேர்மன், பிரான்ஸ், ஆஸ்திரியா, இந்தியா, கனடா, சுவிஸ்லாந்து மற்றும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

Kite Surfing இல் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையர்களே பயிற்சிகளை வழங்குகின்றதாக இலங்கைப் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் என்ற குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தினமும் குறித்த விளையாட்டில் ஈடுபட்டு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதாக இலங்கை பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.



கற்பிட்டி கண்டகுழி களப்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நீர்ச் சறுக்கல் விளையாட்டு. கற்பிட்டி கண்டகுழி களப்பில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்  நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தற்பொழுது கற்பிட்டிக்கு வருகைத் தந்துள்ள அதிகளவிலான சுற்றுலா பயணிகள் கண்டக்குழி பகுதியில் kite Surfing எனப்படும் நீர்ச்சறுக்கல் விளைட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே kite Surfing  மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச் சறுக்கல்  விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு கற்பிட்டி கண்டகுழி கலப்பு ஆழமற்று காணப்படுவதினால் விளையாற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிக இலகுவாக காணப்படுவதாகவும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில், குறித்த நீர்ச் சறுக்கல்  விளையாட்டில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த இடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  பலத்த காற்று வீசுவதுடன், தினமும் மதியம் 12 மணி முதல் 4.30 மணி வரை காற்று அதிகமாக உள்ளதால், இந்த விளையாட்டுக்கு மிகவும் சிறந்தது என அந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினர் குறிப்பிடுகின்றனர்ஜேர்மன், பிரான்ஸ், ஆஸ்திரியா, இந்தியா, கனடா, சுவிஸ்லாந்து மற்றும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.Kite Surfing இல் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையர்களே பயிற்சிகளை வழங்குகின்றதாக இலங்கைப் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் என்ற குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தினமும் குறித்த விளையாட்டில் ஈடுபட்டு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதாக இலங்கை பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement