• May 17 2024

நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும்..!samugammedia

Tamil nila / Dec 19th 2023, 10:26 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (20) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மூன்று நாட்களுக்கான அறிவித்தலை வௌியிட்டு வளிமண்டலவியம் திணைக்களம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது,

வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாகாண மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும்.samugammedia நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (20) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இதனிடையே, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று முதல் மூன்று நாட்களுக்கான அறிவித்தலை வௌியிட்டு வளிமண்டலவியம் திணைக்களம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது,வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாகாண மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement