• Sep 19 2024

காற்று மாசுபாட்டில் மோசமான நாடுகள்! வெளியானது பட்டியல் samugamMedia

Chithra / Mar 15th 2023, 12:25 pm
image

Advertisement

2022 ஆம் ஆண்டில் 13 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மட்டுமே ஆரோக்கியமான காற்றின் தரம் இருப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

அவுஸ்திரேலியா, எஸ்டோனியா, பின்லாந்து, கிரேனடா, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை கடந்த ஆண்டு சிறந்த காற்றின் தரம் கொண்ட நாடுகளாக பெயரிடப்பட்டன.

2022ஆம் ஆண்டில் உலகில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

உலகெங்கிலும் உள்ள காற்று நிலையை கண்காணிக்கும் "IQAir" நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவர்கள் ஆய்வு செய்த 90% நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், வருடாந்திர காற்று மாசுபாடு உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர வழிகாட்டுதல்களை மீறுவதாக அவர்கள் கண்டறிந்தனர்.

அறிக்கையின்படி, 2022 இல் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடாக ஆபிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன், பங்களாதேஷ், புர்கினா பாசோ, குவைட், இந்தியா மற்றும் எகிப்து மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

இப்பட்டியலில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய 3 தெற்காசிய நாடுகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

காற்று மாசுபாட்டில் மோசமான நாடுகள் வெளியானது பட்டியல் samugamMedia 2022 ஆம் ஆண்டில் 13 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மட்டுமே ஆரோக்கியமான காற்றின் தரம் இருப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.அவுஸ்திரேலியா, எஸ்டோனியா, பின்லாந்து, கிரேனடா, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை கடந்த ஆண்டு சிறந்த காற்றின் தரம் கொண்ட நாடுகளாக பெயரிடப்பட்டன.2022ஆம் ஆண்டில் உலகில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.உலகெங்கிலும் உள்ள காற்று நிலையை கண்காணிக்கும் "IQAir" நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.அவர்கள் ஆய்வு செய்த 90% நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், வருடாந்திர காற்று மாசுபாடு உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர வழிகாட்டுதல்களை மீறுவதாக அவர்கள் கண்டறிந்தனர்.அறிக்கையின்படி, 2022 இல் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடாக ஆபிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தவிர, ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன், பங்களாதேஷ், புர்கினா பாசோ, குவைட், இந்தியா மற்றும் எகிப்து மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.இப்பட்டியலில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய 3 தெற்காசிய நாடுகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement