• Nov 24 2024

மேம்பாலத்திலிருந்து அதிவேக வீதியில் வீழ்ந்த இளைஞன் காருடன் மோதுண்டு மரணம்...!

Sharmi / May 25th 2024, 1:23 pm
image

கொட்டாவ புறவழிச்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கொட்டாவ புறவழிச்சாலை மேம்பாலத்திலிருந்து அதிவேக வீதியில் குதித்த இளைஞனை, மாத்தறை நோக்கி பயணித்த கார் ஒன்று மோதியதில் இளைஞர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில்  படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக  ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் பாதுக்கை பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை விபத்து சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த இளைஞன் நெடுஞ்சாலையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு தரப்பினர் அந்த இளைஞனை பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் தள்ளினார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.







மேம்பாலத்திலிருந்து அதிவேக வீதியில் வீழ்ந்த இளைஞன் காருடன் மோதுண்டு மரணம். கொட்டாவ புறவழிச்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொட்டாவ புறவழிச்சாலை மேம்பாலத்திலிருந்து அதிவேக வீதியில் குதித்த இளைஞனை, மாத்தறை நோக்கி பயணித்த கார் ஒன்று மோதியதில் இளைஞர் படுகாயமடைந்தார்.இந்நிலையில்  படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக  ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தில் பாதுக்கை பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை விபத்து சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.குறித்த இளைஞன் நெடுஞ்சாலையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு தரப்பினர் அந்த இளைஞனை பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் தள்ளினார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement