தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
தன்னுடைய இசைநிகழ்ச்சிக்காகவே அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். நாட்டை வந்தடைந்த இசையமைப்பாளர் தேவாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு மலர்க்கொத்தை வழங்கி அவரை வரவேற்றதுடன் கண்டிய நடனம் ஒன்றையும் நிகழ்த்தி அவரை வரவேற்றனர்.
கடந்த 1990 , 2000 ஆம் ஆண்டு ஆரம்பகாலப் பகுதியில் மட்டுமன்றி தற்போது வரை கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர்களில் முன்னோடியாகத் திகழ்பவரே இசையமைப்பாளர் தேவா.
பெரியோர், சிறியோர், இளைஞர், யுவதிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன்னுடைய இரசிகர்களாக்கினார்.
கானா பாடல்கள், குத்து பாடல்கள், மெலடி பாடல்கள் என்றவாறாக பல குரல்களில் கவர்ந்த இசையமைப்பாளரே தேவா.
உலகம் முழுவதும் பல கோடி இரசிகர்களைக் கொண்ட இவர்இலங்கையில் ஒரு இசைநிகழ்ச்சியை நடத்துவதற்காக இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் அவருடைய மகன் உள்ளிட்ட குழுவினரும் வருகை தந்தனர்.
தனக்கென ஓர் இரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தேவாவின் இசைநிகழ்ச்சியைக் காண இலங்கை இரசிகர்கள் ஆர்வமாகவும் எதிர்பார்ப்புடனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை வந்தடைந்தார் தேனிசைத் தென்றல் தேவா; இசைநிகழ்ச்சியைக் காண மகிழ்ச்சியில் இரசிகர்கள் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். தன்னுடைய இசைநிகழ்ச்சிக்காகவே அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். நாட்டை வந்தடைந்த இசையமைப்பாளர் தேவாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு மலர்க்கொத்தை வழங்கி அவரை வரவேற்றதுடன் கண்டிய நடனம் ஒன்றையும் நிகழ்த்தி அவரை வரவேற்றனர். கடந்த 1990 , 2000 ஆம் ஆண்டு ஆரம்பகாலப் பகுதியில் மட்டுமன்றி தற்போது வரை கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர்களில் முன்னோடியாகத் திகழ்பவரே இசையமைப்பாளர் தேவா. பெரியோர், சிறியோர், இளைஞர், யுவதிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன்னுடைய இரசிகர்களாக்கினார். கானா பாடல்கள், குத்து பாடல்கள், மெலடி பாடல்கள் என்றவாறாக பல குரல்களில் கவர்ந்த இசையமைப்பாளரே தேவா. உலகம் முழுவதும் பல கோடி இரசிகர்களைக் கொண்ட இவர்இலங்கையில் ஒரு இசைநிகழ்ச்சியை நடத்துவதற்காக இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் அவருடைய மகன் உள்ளிட்ட குழுவினரும் வருகை தந்தனர். தனக்கென ஓர் இரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தேவாவின் இசைநிகழ்ச்சியைக் காண இலங்கை இரசிகர்கள் ஆர்வமாகவும் எதிர்பார்ப்புடனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.