• Aug 12 2025

வீட்டுத்திட்டத்தில் உரிய வசதிகள் இல்லை - பயனாளிகள் முறைப்பாடு!

shanuja / Aug 11th 2025, 3:18 pm
image

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்பட்ட சாமிமலை சின்ன தெய்வகந்தை டீ சைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி வீட்டு திட்டத்தில் தமக்கான உரிய வசதிகள் இல்லை என்று பயனாளிகள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 


15 வீடுகளை உள்ளடக்கிய குறித்த வீடமைப்பு திட்டம் கடந்த 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியன்று நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 


அதே தினத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வந்த நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இடைநடுவில் கைவிடப்பட்டது .


இந்த நிலையில் குறித்த வீட்டு திட்டத்தில் பயனாளி ஒருவரது வீட்டு கூரைகள் மற்றும் சிலரது வீட்டிற்கு பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு உபகரணங்கள் போன்றவை ஒரு சில விசமிகளால் திருடபட்டுள்ளது.  குறித்த விடயம் சம்பந்தமாக மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் குறித்த வீட்டின் கூரையின் வாயிலாக மழைக்காலத்தில் வீட்டின் உள்ளே நீர் வழிந்து உள்ளே வருவதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர் மேலும் ஒருவர் வீட்டில் சுவர்கள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,   வீட்டு திட்டத்திற்கு மின் பம்மி பொருத்தபட்டு அதன் வழியாக குடிநீர் பெறப்பட்டுள்ளதால் அதற்காக மாதம் மூவாயிரம் ரூபாய் பணம் அறவிடப்படுதாகவும் அதனால் தாம் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்  கவலை வெளியிட்டுள்ளனர். 


மேலும் குறித்த வீடுகளுக்கு செல்வதற்கான வீதி அமைத்து கொடுக்கப்படாத காரணத்தால் வாகனங்கள் உட்செல்ல முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த முன்வர வேண்டும் என்று  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளை சம்பந்தப்பட்ட டிக்கோயா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சு முன்வந்து  குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டுத்திட்டத்தில் உரிய வசதிகள் இல்லை - பயனாளிகள் முறைப்பாடு மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்பட்ட சாமிமலை சின்ன தெய்வகந்தை டீ சைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி வீட்டு திட்டத்தில் தமக்கான உரிய வசதிகள் இல்லை என்று பயனாளிகள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 15 வீடுகளை உள்ளடக்கிய குறித்த வீடமைப்பு திட்டம் கடந்த 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியன்று நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதே தினத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வந்த நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இடைநடுவில் கைவிடப்பட்டது .இந்த நிலையில் குறித்த வீட்டு திட்டத்தில் பயனாளி ஒருவரது வீட்டு கூரைகள் மற்றும் சிலரது வீட்டிற்கு பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு உபகரணங்கள் போன்றவை ஒரு சில விசமிகளால் திருடபட்டுள்ளது.  குறித்த விடயம் சம்பந்தமாக மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் குறித்த வீட்டின் கூரையின் வாயிலாக மழைக்காலத்தில் வீட்டின் உள்ளே நீர் வழிந்து உள்ளே வருவதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர் மேலும் ஒருவர் வீட்டில் சுவர்கள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,   வீட்டு திட்டத்திற்கு மின் பம்மி பொருத்தபட்டு அதன் வழியாக குடிநீர் பெறப்பட்டுள்ளதால் அதற்காக மாதம் மூவாயிரம் ரூபாய் பணம் அறவிடப்படுதாகவும் அதனால் தாம் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்  கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த வீடுகளுக்கு செல்வதற்கான வீதி அமைத்து கொடுக்கப்படாத காரணத்தால் வாகனங்கள் உட்செல்ல முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த முன்வர வேண்டும் என்று  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளை சம்பந்தப்பட்ட டிக்கோயா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சு முன்வந்து  குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement