• May 19 2024

வடகிழக்கு மக்களை சமய ரீதியில் போருக்கு அழைக்கும் சம்பவங்களே நடக்கின்றன! அருட்தந்தை மா.சத்திவேல் samugammedia

Chithra / May 4th 2023, 11:16 am
image

Advertisement

வடகிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (04.05.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்த வலிகளோடு அன்றாட வாழ்வியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் வடகிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

படையினரின் தேவைக்கு தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களே தற்போது புதிது புதிதாக பௌத்த சின்னங்களையும், விகாரைகளையும், தூபிகளையும் அமைத்து ஆக்கிரமிப்பிற்கு புதிய வடிவம் கொடுப்பதோடு இன்று பௌத்த - இந்து நேரடி மோதலுக்கும் வலிந்து அழைக்கின்றனர் என்பதை வலிகாமம் வடக்கு  தையிட்டி நிகழ்வு எடுத்து காட்டுகின்றது. 

அரசியல் உள்நோக்கம் கொண்ட இச் செயற்பாட்டினை சமயம் கடந்து அனைத்து தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்போடு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதலை தூண்டி அரசியல் குளிர்காய நினைத்த சக்திகளும், அவர்களை இன்றும் பாதுகாக்கும் சக்திகளுமே அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டு தற்போது பௌத்த- இந்து மோதலை வடக்கிலே ஆரம்பிக்க முனைப்பு காட்டுகின்றன. 

இதனை சமய நல்லிணக்கம் விரும்பும் அனைவரும் இதனை கண்டிப்பதோடு தனது பலத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.

அடாத்தாக பௌத்த சின்னங்களை வைப்பதையும், விகாரைகள், தூபிகள் அமைப்பதையும் ஒரு சில  கிறிஸ்தவ சமய அடிப்படை வாத சக்திகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதையும் சமய நல்லிணக்கம் விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய அநாகரீக செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. 

இந் நிலையில் கிறிஸ்தவ தலைமைத்துவங்கள் அறிக்கைகளுக்கு மட்டும் தம்மை கட்டுப்படுத்தி விடாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தோடு கைகோர்த்து எழுந்து நிற்பதே தேசியத்தை பாதுகாக்கும் காலத்தின் அரசியல் செயற்பாடாகும்.

நில ஆக்கிரமிப்பிற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கில் கடையடைப்பு  செய்த அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களின் தேசிய நலன் கருதி ஒன்றிணைய வேண்டிய காலம். தையிட்டி மக்களுக்கு அவர்களுக்குரிய காணிகளை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது பிரதேசத்தையும், மக்களையும் பாதுகாக்கும் செயல் என்பதோடு தாயகத்தை காப்பதற்கான எதிர்கால செயற்பாட்டுக்கும் துணை செய்யும்.

இந்தியாவின் அரசியல் பிடிக்குள் இருந்து இலங்கை தம்மை விடுவித்து கொள்ள நினைக்கும் பின்னணியில் அதனை உணர்ந்து செயல்படும் இந்தியா அன்று உணவு பொட்டலங்களை பலவந்தமாக கொண்டு வந்து போட்டது போன்று எந்த காரியத்தையும் அவசரமாக  போவதில்லை. 

இந்தியாவின் அமைதி காத்தலை பாவித்து பௌத்த மட்டும் ராணுவ மயம் தொடர்கின்றது. அரசியல் நுண் அறிவோடும் மக்கள் சக்தியோடும் முன்னெடுக்கும் நகர்வுகளே ஆக்கிரமிப்பை தடுக்கும்.இலக்கு நோக்கிய அரசியல் பயணத்திற்குப் வழிவகுக்கும்.என்றார்

வடகிழக்கு மக்களை சமய ரீதியில் போருக்கு அழைக்கும் சம்பவங்களே நடக்கின்றன அருட்தந்தை மா.சத்திவேல் samugammedia வடகிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (04.05.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,யுத்த வலிகளோடு அன்றாட வாழ்வியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் வடகிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. படையினரின் தேவைக்கு தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களே தற்போது புதிது புதிதாக பௌத்த சின்னங்களையும், விகாரைகளையும், தூபிகளையும் அமைத்து ஆக்கிரமிப்பிற்கு புதிய வடிவம் கொடுப்பதோடு இன்று பௌத்த - இந்து நேரடி மோதலுக்கும் வலிந்து அழைக்கின்றனர் என்பதை வலிகாமம் வடக்கு  தையிட்டி நிகழ்வு எடுத்து காட்டுகின்றது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இச் செயற்பாட்டினை சமயம் கடந்து அனைத்து தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்போடு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதலை தூண்டி அரசியல் குளிர்காய நினைத்த சக்திகளும், அவர்களை இன்றும் பாதுகாக்கும் சக்திகளுமே அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டு தற்போது பௌத்த- இந்து மோதலை வடக்கிலே ஆரம்பிக்க முனைப்பு காட்டுகின்றன. இதனை சமய நல்லிணக்கம் விரும்பும் அனைவரும் இதனை கண்டிப்பதோடு தனது பலத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.அடாத்தாக பௌத்த சின்னங்களை வைப்பதையும், விகாரைகள், தூபிகள் அமைப்பதையும் ஒரு சில  கிறிஸ்தவ சமய அடிப்படை வாத சக்திகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதையும் சமய நல்லிணக்கம் விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய அநாகரீக செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. இந் நிலையில் கிறிஸ்தவ தலைமைத்துவங்கள் அறிக்கைகளுக்கு மட்டும் தம்மை கட்டுப்படுத்தி விடாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தோடு கைகோர்த்து எழுந்து நிற்பதே தேசியத்தை பாதுகாக்கும் காலத்தின் அரசியல் செயற்பாடாகும்.நில ஆக்கிரமிப்பிற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கில் கடையடைப்பு  செய்த அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களின் தேசிய நலன் கருதி ஒன்றிணைய வேண்டிய காலம். தையிட்டி மக்களுக்கு அவர்களுக்குரிய காணிகளை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது பிரதேசத்தையும், மக்களையும் பாதுகாக்கும் செயல் என்பதோடு தாயகத்தை காப்பதற்கான எதிர்கால செயற்பாட்டுக்கும் துணை செய்யும்.இந்தியாவின் அரசியல் பிடிக்குள் இருந்து இலங்கை தம்மை விடுவித்து கொள்ள நினைக்கும் பின்னணியில் அதனை உணர்ந்து செயல்படும் இந்தியா அன்று உணவு பொட்டலங்களை பலவந்தமாக கொண்டு வந்து போட்டது போன்று எந்த காரியத்தையும் அவசரமாக  போவதில்லை. இந்தியாவின் அமைதி காத்தலை பாவித்து பௌத்த மட்டும் ராணுவ மயம் தொடர்கின்றது. அரசியல் நுண் அறிவோடும் மக்கள் சக்தியோடும் முன்னெடுக்கும் நகர்வுகளே ஆக்கிரமிப்பை தடுக்கும்.இலக்கு நோக்கிய அரசியல் பயணத்திற்குப் வழிவகுக்கும்.என்றார்

Advertisement

Advertisement

Advertisement