• May 17 2024

கொரோனாவை விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு! samugammedia

Tamil nila / May 24th 2023, 9:22 pm
image

Advertisement

அடுத்த உலகளாவிய தொற்றுநோய்க்கு தயாராக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த கூட்டத்தில், அதன் தலைவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொடர்பான உலகளாவிய அவசரநிலை தற்போது முடிவுக்கு வந்தாலும், கோவிட் காரணமாக உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பெருந்தொற்று கொரோனா தொற்றை விட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று ஆரம்பித்த போது, அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கவில்லை. அதன் காரணமாக அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.


கொரோனாவை விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு samugammedia அடுத்த உலகளாவிய தொற்றுநோய்க்கு தயாராக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த கூட்டத்தில், அதன் தலைவர் கூறியுள்ளார்.கொரோனா தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.கொரோனா தொடர்பான உலகளாவிய அவசரநிலை தற்போது முடிவுக்கு வந்தாலும், கோவிட் காரணமாக உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.புதிய பெருந்தொற்று கொரோனா தொற்றை விட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.கொரோனா தொற்று ஆரம்பித்த போது, அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கவில்லை. அதன் காரணமாக அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

Advertisement