• Nov 22 2024

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மீண்டும் பரபரப்பு...! கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு...!samugammedia

Sharmi / Feb 19th 2024, 12:29 pm
image

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குமாறு  அக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சரத் ​​பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிலர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மீண்டும் பரபரப்பு. கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு.samugammedia ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குமாறு  அக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், சரத் ​​பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிலர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement