• May 17 2024

வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை! தேர்தலை நடத்துவதில் சிக்கல்

Chithra / Jan 31st 2023, 1:46 pm
image

Advertisement

தேர்தல் பணிகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காததால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பயன்படுத்துப்படும் வாகனங்களுக்கு போதியளவு எரிபொருள் இல்லாததால், பல மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தேர்தலுக்கு தேவையான எரிபொருளை பெறுவது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் ஆணையம் கோரியபடி எரிபொருளை வெளியிட முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு தடைகளை நீக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை தேர்தலை நடத்துவதில் சிக்கல் தேர்தல் பணிகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காததால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேர்தல் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பயன்படுத்துப்படும் வாகனங்களுக்கு போதியளவு எரிபொருள் இல்லாததால், பல மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் தேர்தலுக்கு தேவையான எரிபொருளை பெறுவது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.எனினும், தேர்தல் ஆணையம் கோரியபடி எரிபொருளை வெளியிட முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு தடைகளை நீக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement