• May 01 2024

கடலட்டை பண்ணைகளால் எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை; தவறான கருத்துக்களைக் கூற வேண்டாம்! பூநகரி கடற்தொழிலாளர் சங்கம் கோரிக்கை SamugamMedia

Chithra / Mar 22nd 2023, 3:59 pm
image

Advertisement

பூநகரி பிரதேச கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைகள் எந்த விதத்திலும் பாதிப்பை தரவில்லை. பெருமளவான இலாபத்தையே ஈட்ட முடிந்தது. எனவே தவறான கருத்துக்களைக் கூறி எமது வாழ்வாதாரம் பாதிப்பதற்கு வழிசமைக்க வேண்டாம் என பூநகரி திருமுருகன் கடற்தொழிளாளர் சங்க செயளாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் (21)  வடமாகாண கடற்தொழிளாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அன்னராசா தலமையில் ஊடக சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்தனர்.  அவ் ஊடக சந்திப்பில் பூநகரி பிரதேச கடற்பரப்பில் அத்துமீறிய கடலட்டைப் பண்ணை அமைப்பதாக  ஒருவர் கூறியிருந்தார்.

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பது தொடர்பாக கடற்தொழில்சார் சகல திணைக்களங்களும்  உரிய முறையில்  ஆய்வு செய்து பூநகரிப் பிரதேசத்தில் இரணை தீவு, நாச்சிக்குடா, பள்ளிக்குடா, கிராஞ்சி, வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் கௌதாரிமுனை ஆகிய பிரதேசங்களில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை அனுமதியின்றி காணப்படும் அட்டைப் பண்ணைகளை பூநகரி பிரதேச செயளாளரால் நீதிமன்றத்தி்ல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

இவற்றுடன் நாரா நிறுவனத்தால் ஏனைய திணைக்களங்களுடன் ஆய்வு செய்து சட்டரீதியற்ற பண்ணைகளை ஏனைய தொழில்முறைகளுக்கு பாதிப்பேற்படாத வகையில் காணப்படும் சட்டரீதியாக்கும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.

சட்ட விரோதப் பண்ணைகள் அமைக்கப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமிடத்து பிரதேச செயளாளர் உரிய அதிகாரிகளூடாக அதற்கெதிராக உரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக சட்டவிரோத் பண்ணைகள்  எதுவும் எமது பிரதேசத்தில் தற்போது இல்லை. இவற்றை அறியாமல் 50000 குடும்பங்கள் தொழில் செய்யும் இடத்தில் பண்ணைகள் அமைத்துள்தாக ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தானது போதிய விளக்கமின்மையையே குறிக்கின்றது.

எமது நீண்ட காலக் கோரிக்கையின் நிமிர்த்தம் தற்சமயம் அட்டைப் பண்ணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது. 

இப் பண்ணைக்கு கடற்படையின் ஆதரவு அமைச்சரின் ஆதரவுள்ளது எனவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

குறித்த பண்ணைக்கு அனுமதியைப் பெற வேண்டுமாயின் பல்வேறு திணைக்களத்திடம் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும்.  

எனவே தவறான கருத்துக்களைக் கூறி எமது வாழ்வாதாரம் பாதிப்பதற்கு வழிசமைக்க வேண்டாமன கேட்டுக்கொள்கின்றேன்.

இதேவேளை ஊடகவியளாளர்கள் வினாவிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

நாங்களும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத வருகையை எதிரக்கின்றோம். இதனாலேயே கச்சதீவிலும் கலந்துரையாடலில் பங்கெடுத்தோம். அங்கும் அரசியல் சார்பானவர்கள் பங்கெடுத்ததாக போலித் தகவல்கள் வெளிவந்தன. 

சமூக மட்ட யெற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்பவர்களே வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவர். அந்தவகையில் சங்கங்களில் பிரதிநிதித்துவம் செய்வோர் வேட்பாளர்களாக காணப்பட்டாலும் சங்கங்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியிலே பேச்சுவார்த்தையிலும் பங்கெடுத்தனர்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக மன்னாரில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளோம். எது எவ்வாறாயினும் இரு தரப்பு மீனவர்களும் தத்தமது எல்லை மீறி தொழிலை மேற்கொள்வது பிழையான விடயமே.

தற்போது கடலட்டைகளை உள்ளூருக்குள்ளே சந்தைப்படுத்தக்கூடியவாறான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. கடந்த வருட காலப்பகுதியில் இயற்கை அழிவால் பாதிப்புக்கள் ஏற்பட்டாலும்  கடலட்டை பண்ணைகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. பெருமளவான இலாபத்தையே ஈட்ட முடிந்தது.

வெளித்தரப்புக்கள் எமது கிராம நலன் சார் செயற்திட்டங்களை முன்னெடுக்க முன்வருவார்களாயின் அவர்களுக்கும் எமது பிரதேசப் பரப்பில் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதியை வழங்குதல் சாத்தியப்படும்.- என்றார்.

கடலட்டை பண்ணைகளால் எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை; தவறான கருத்துக்களைக் கூற வேண்டாம் பூநகரி கடற்தொழிலாளர் சங்கம் கோரிக்கை SamugamMedia பூநகரி பிரதேச கடற்பரப்பில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைகள் எந்த விதத்திலும் பாதிப்பை தரவில்லை. பெருமளவான இலாபத்தையே ஈட்ட முடிந்தது. எனவே தவறான கருத்துக்களைக் கூறி எமது வாழ்வாதாரம் பாதிப்பதற்கு வழிசமைக்க வேண்டாம் என பூநகரி திருமுருகன் கடற்தொழிளாளர் சங்க செயளாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் (21)  வடமாகாண கடற்தொழிளாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அன்னராசா தலமையில் ஊடக சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்தனர்.  அவ் ஊடக சந்திப்பில் பூநகரி பிரதேச கடற்பரப்பில் அத்துமீறிய கடலட்டைப் பண்ணை அமைப்பதாக  ஒருவர் கூறியிருந்தார்.கடலட்டைப் பண்ணைகளை அமைப்பது தொடர்பாக கடற்தொழில்சார் சகல திணைக்களங்களும்  உரிய முறையில்  ஆய்வு செய்து பூநகரிப் பிரதேசத்தில் இரணை தீவு, நாச்சிக்குடா, பள்ளிக்குடா, கிராஞ்சி, வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் கௌதாரிமுனை ஆகிய பிரதேசங்களில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதேவேளை அனுமதியின்றி காணப்படும் அட்டைப் பண்ணைகளை பூநகரி பிரதேச செயளாளரால் நீதிமன்றத்தி்ல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றுடன் நாரா நிறுவனத்தால் ஏனைய திணைக்களங்களுடன் ஆய்வு செய்து சட்டரீதியற்ற பண்ணைகளை ஏனைய தொழில்முறைகளுக்கு பாதிப்பேற்படாத வகையில் காணப்படும் சட்டரீதியாக்கும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.சட்ட விரோதப் பண்ணைகள் அமைக்கப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமிடத்து பிரதேச செயளாளர் உரிய அதிகாரிகளூடாக அதற்கெதிராக உரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமுள்ளார்.இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக சட்டவிரோத் பண்ணைகள்  எதுவும் எமது பிரதேசத்தில் தற்போது இல்லை. இவற்றை அறியாமல் 50000 குடும்பங்கள் தொழில் செய்யும் இடத்தில் பண்ணைகள் அமைத்துள்தாக ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தானது போதிய விளக்கமின்மையையே குறிக்கின்றது.எமது நீண்ட காலக் கோரிக்கையின் நிமிர்த்தம் தற்சமயம் அட்டைப் பண்ணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இப் பண்ணைக்கு கடற்படையின் ஆதரவு அமைச்சரின் ஆதரவுள்ளது எனவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறித்த பண்ணைக்கு அனுமதியைப் பெற வேண்டுமாயின் பல்வேறு திணைக்களத்திடம் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும்.  எனவே தவறான கருத்துக்களைக் கூறி எமது வாழ்வாதாரம் பாதிப்பதற்கு வழிசமைக்க வேண்டாமன கேட்டுக்கொள்கின்றேன்.இதேவேளை ஊடகவியளாளர்கள் வினாவிய கேள்விக்கு பதிலளிக்கையில்,நாங்களும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத வருகையை எதிரக்கின்றோம். இதனாலேயே கச்சதீவிலும் கலந்துரையாடலில் பங்கெடுத்தோம். அங்கும் அரசியல் சார்பானவர்கள் பங்கெடுத்ததாக போலித் தகவல்கள் வெளிவந்தன. சமூக மட்ட யெற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்பவர்களே வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவர். அந்தவகையில் சங்கங்களில் பிரதிநிதித்துவம் செய்வோர் வேட்பாளர்களாக காணப்பட்டாலும் சங்கங்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியிலே பேச்சுவார்த்தையிலும் பங்கெடுத்தனர்.இதேவேளை எதிர்வரும் நாட்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக மன்னாரில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளோம். எது எவ்வாறாயினும் இரு தரப்பு மீனவர்களும் தத்தமது எல்லை மீறி தொழிலை மேற்கொள்வது பிழையான விடயமே.தற்போது கடலட்டைகளை உள்ளூருக்குள்ளே சந்தைப்படுத்தக்கூடியவாறான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. கடந்த வருட காலப்பகுதியில் இயற்கை அழிவால் பாதிப்புக்கள் ஏற்பட்டாலும்  கடலட்டை பண்ணைகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. பெருமளவான இலாபத்தையே ஈட்ட முடிந்தது.வெளித்தரப்புக்கள் எமது கிராம நலன் சார் செயற்திட்டங்களை முன்னெடுக்க முன்வருவார்களாயின் அவர்களுக்கும் எமது பிரதேசப் பரப்பில் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதியை வழங்குதல் சாத்தியப்படும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement