• May 22 2024

கோவில் காணியை தனியார் ஒருவர் அபகரிக்க முயற்சி; தடுத்து நிறுத்திய பொது மக்கள் SamugamMedia

Chithra / Mar 22nd 2023, 4:13 pm
image

Advertisement

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் நெத்தலியாறு முத்து விநாயகர் கோவிலுக்கு  உரிய சுமார் 15 ஏக்கர் காணியில் தனக்கு உரிமை இருப்பதாகக் கூறி ஒருவர் சுவீகரிக்க முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இக் காணியானது சுமார் 40 வருடங்களாக ஆலய பராமரிப்பிலேயே இருந்து வருகின்றது.

இருப்பினும் சிலருக்கு  20 வருடத்திற்கு  முன்னர் குத்தகை அடிப்படையில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு மாத்திரம் வழங்கபட்டது.

எனினும் இதில் உரிமை கோருவதற்கோ அல்லது உரிமம் பத்திரம் பெறுவதற்கோ எவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தற்பொழுது ஒருவர், ஆலய வளாகத்தில் தனக்கு காணி இருப்பதாக கூறி தற்காலிக உரிமப்பத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து காகாணியை சுவிகரிக்க முயற்சிக்கும் நோக்கில்  எல்லைத் தூண்கள் இடுவதற்கு முற்பட்டுள்ளார்.

இந் நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பல மணி நேர வாய்த்தர்க்கத்தின்  பின் சுவீகரிக்க வந்த நபர் மற்றும் உழவு இயந்திரம், ஏனைய பொருட்களைக் கொண்டு மீண்டும் திரும்பி சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலாளர் உரிய தீர்வுகளை பெற்றுத் தர வேண்டும் என  ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் தருமபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


கோவில் காணியை தனியார் ஒருவர் அபகரிக்க முயற்சி; தடுத்து நிறுத்திய பொது மக்கள் SamugamMedia கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் நெத்தலியாறு முத்து விநாயகர் கோவிலுக்கு  உரிய சுமார் 15 ஏக்கர் காணியில் தனக்கு உரிமை இருப்பதாகக் கூறி ஒருவர் சுவீகரிக்க முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இக் காணியானது சுமார் 40 வருடங்களாக ஆலய பராமரிப்பிலேயே இருந்து வருகின்றது.இருப்பினும் சிலருக்கு  20 வருடத்திற்கு  முன்னர் குத்தகை அடிப்படையில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு மாத்திரம் வழங்கபட்டது.எனினும் இதில் உரிமை கோருவதற்கோ அல்லது உரிமம் பத்திரம் பெறுவதற்கோ எவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் தற்பொழுது ஒருவர், ஆலய வளாகத்தில் தனக்கு காணி இருப்பதாக கூறி தற்காலிக உரிமப்பத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து காகாணியை சுவிகரிக்க முயற்சிக்கும் நோக்கில்  எல்லைத் தூண்கள் இடுவதற்கு முற்பட்டுள்ளார்.இந் நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பல மணி நேர வாய்த்தர்க்கத்தின்  பின் சுவீகரிக்க வந்த நபர் மற்றும் உழவு இயந்திரம், ஏனைய பொருட்களைக் கொண்டு மீண்டும் திரும்பி சென்றுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலாளர் உரிய தீர்வுகளை பெற்றுத் தர வேண்டும் என  ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன் சம்பவம் தொடர்பில் தருமபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement