சமூகப்பற்றுள்ள மக்கள் நலன்பேனுகின்ற அரசியல்வாதிகளை ஆதரிப்பதில் எந்தத் தவறுமில்லை என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் ஹிதாயத் நகரில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய போது முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரங்களை கொண்டிருந்த சிலர் பணத்துக்கும் பதவிகளுக்கும் சோரம்போய் பேரினவாதிகளை திருப்திப்படுத்தினர்.
தேர்தல் வருகின்றபோது மக்களை நாடி வருகின்ற குறித்த அரசியல்வாதிகள் ஏழை மக்களை மூளைச்சலவை செய்து அன்பளிப்புக்கள் எனும் போர்வையில் கப்பங்களைக் கொடுத்து அந்த மக்களின் வாக்குகளை கபளிகரம் செய்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்ததும் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்யாமலும் மக்கள் நலனில் அக்கரையில்லாமலும் குடும்பத்தோடு கொழும்பிலே உல்லாசமாக வாழ்கின்றனர்.
ஏழை மக்களின் வாக்குகளை சூறையாடி கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் இறுதியில் கட்சிக்கும் சமூகத்துக்கும் துரோகமிழைத்துவிட்டு முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டனர். கடைசியில் அவர்களின் நிலைமைகளை அவதானித்திருப்பீர்கள். அமானிதத்தை பாதுகாக்காதவர்களுக்கு இறைவனுடைய உதவியும் கிடையாது மக்களின் ஆதரவும் கிடையாது.
குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்திலே வாழ்கின்ற மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது பொருளாதாரங்களையும் உயிர் உடமைகளையும் இழந்தனர். தொடர்ச்சியாக விவசாயம் செய்து வந்த காணிகளையும் இழந்தும் உள்ளனர். இந்தப் பிரதேசத்திலே தான் அதிகமான விதவைப் பெண்களும் வாழ்கின்றனர். இவர்கள் இழந்தவைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏழைகளுடைய வாழ்வாதாரம் தொடர்பிலும் சிந்திப்பதற்கு அந்த அரசியல்வாதிகளால் முடியவில்லை.
நாட்டிலே ஏற்பட்ட கொரோனா அனர்த்தம், அதன் பின்னரான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, வெள்ள அனர்த்தம் காரணமாகவும் இந்தப் பிரதேசத்திலே வாழுகின்ற நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பதவிகளுக்குள்ளும் பணங்களுக்கும் மூழ்கி உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்களினால் ஏழை மக்களின் வலிகளை உணரமுடியாது.
குறிப்பாக ஏறாவூர் பிரதேச மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காக உழைக்கின்ற அரசியல்வாதிகளை இனம்கண்டு அவர்களை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை. சில அரசியல்வாதிகள் தங்களுடைய ஆங்கில புலமை தங்களுடைய அழகு வடிவுகளையும், கோத்திரங்களையும் கூறிக்கொண்டு வாக்குகளை அபகரிக்கின்றனர். சமூகத்தை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளுக்கு ஏறாவூர் மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.
நான் ஒரு கஷ்டமான ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் ஏழைகளின் வலிகளையும் உணர்வுகளையும் நன்கறிந்தவன். பல சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் கிடைத்த அரசியல் அதிகாரத்தைக்கொண்டு இந்த மண்ணிலே பெரும் பணிகளை செய்தவன். குறிப்பாக ஒவ்வொருவருடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் அறிந்து சேவையாற்றியவன். அரசியல் அதிகாரம் இல்லாத காலங்களிலும் என்னால் முடியுமான உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றேன்.
இவ்வாறான பணிகளை செய்த எனக்கு இந்த பிரதேச மக்கள் சொற்ப வாக்குகளையே வழங்குகின்றனர். இந்த சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை இந்த ஊரிலே இருந்துகொண்டு அவதானிக்கின்றேன். மக்களினுடைய பிரச்சினைகளை அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் தனியார் நிறுவனங்களிடமும் கொண்டு சென்று பணி செய்கின்ற வல்லமையினை இறைவன் தந்துள்ளான். மக்களுக்கான எனது பணியினை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.
எனது நண்பர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மர்ஹும் ஹசன் மௌலவி வழங்கிய வாக்குறுதிக்காக அவருடைய புதல்வர்கள் தொண்டு நிறுவனங்களினூடாக இந்த பிரதேசத்திலே என்னூடாக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
மக்கள் நலன்பேனுகின்ற அரசியல்வாதிகளை ஆதரிப்பதில் எந்தத் தவறுமில்லை: முன்னாள் அமைச்சர் சுபைர் தெரிவிப்பு. சமூகப்பற்றுள்ள மக்கள் நலன்பேனுகின்ற அரசியல்வாதிகளை ஆதரிப்பதில் எந்தத் தவறுமில்லை என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.ஏறாவூர் ஹிதாயத் நகரில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய போது முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரங்களை கொண்டிருந்த சிலர் பணத்துக்கும் பதவிகளுக்கும் சோரம்போய் பேரினவாதிகளை திருப்திப்படுத்தினர்.தேர்தல் வருகின்றபோது மக்களை நாடி வருகின்ற குறித்த அரசியல்வாதிகள் ஏழை மக்களை மூளைச்சலவை செய்து அன்பளிப்புக்கள் எனும் போர்வையில் கப்பங்களைக் கொடுத்து அந்த மக்களின் வாக்குகளை கபளிகரம் செய்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்ததும் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்யாமலும் மக்கள் நலனில் அக்கரையில்லாமலும் குடும்பத்தோடு கொழும்பிலே உல்லாசமாக வாழ்கின்றனர்.ஏழை மக்களின் வாக்குகளை சூறையாடி கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் இறுதியில் கட்சிக்கும் சமூகத்துக்கும் துரோகமிழைத்துவிட்டு முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டனர். கடைசியில் அவர்களின் நிலைமைகளை அவதானித்திருப்பீர்கள். அமானிதத்தை பாதுகாக்காதவர்களுக்கு இறைவனுடைய உதவியும் கிடையாது மக்களின் ஆதரவும் கிடையாது.குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்திலே வாழ்கின்ற மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது பொருளாதாரங்களையும் உயிர் உடமைகளையும் இழந்தனர். தொடர்ச்சியாக விவசாயம் செய்து வந்த காணிகளையும் இழந்தும் உள்ளனர். இந்தப் பிரதேசத்திலே தான் அதிகமான விதவைப் பெண்களும் வாழ்கின்றனர். இவர்கள் இழந்தவைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏழைகளுடைய வாழ்வாதாரம் தொடர்பிலும் சிந்திப்பதற்கு அந்த அரசியல்வாதிகளால் முடியவில்லை. நாட்டிலே ஏற்பட்ட கொரோனா அனர்த்தம், அதன் பின்னரான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, வெள்ள அனர்த்தம் காரணமாகவும் இந்தப் பிரதேசத்திலே வாழுகின்ற நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பதவிகளுக்குள்ளும் பணங்களுக்கும் மூழ்கி உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்களினால் ஏழை மக்களின் வலிகளை உணரமுடியாது.குறிப்பாக ஏறாவூர் பிரதேச மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காக உழைக்கின்ற அரசியல்வாதிகளை இனம்கண்டு அவர்களை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை. சில அரசியல்வாதிகள் தங்களுடைய ஆங்கில புலமை தங்களுடைய அழகு வடிவுகளையும், கோத்திரங்களையும் கூறிக்கொண்டு வாக்குகளை அபகரிக்கின்றனர். சமூகத்தை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளுக்கு ஏறாவூர் மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.நான் ஒரு கஷ்டமான ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் ஏழைகளின் வலிகளையும் உணர்வுகளையும் நன்கறிந்தவன். பல சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் கிடைத்த அரசியல் அதிகாரத்தைக்கொண்டு இந்த மண்ணிலே பெரும் பணிகளை செய்தவன். குறிப்பாக ஒவ்வொருவருடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் அறிந்து சேவையாற்றியவன். அரசியல் அதிகாரம் இல்லாத காலங்களிலும் என்னால் முடியுமான உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றேன்.இவ்வாறான பணிகளை செய்த எனக்கு இந்த பிரதேச மக்கள் சொற்ப வாக்குகளையே வழங்குகின்றனர். இந்த சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை இந்த ஊரிலே இருந்துகொண்டு அவதானிக்கின்றேன். மக்களினுடைய பிரச்சினைகளை அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் தனியார் நிறுவனங்களிடமும் கொண்டு சென்று பணி செய்கின்ற வல்லமையினை இறைவன் தந்துள்ளான். மக்களுக்கான எனது பணியினை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.எனது நண்பர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மர்ஹும் ஹசன் மௌலவி வழங்கிய வாக்குறுதிக்காக அவருடைய புதல்வர்கள் தொண்டு நிறுவனங்களினூடாக இந்த பிரதேசத்திலே என்னூடாக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.