• May 14 2024

சூப் குடிப்பதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

Sharmi / Dec 11th 2022, 10:29 pm
image

Advertisement

பொதுவாக எமது உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களை ஓரே தடவையில் கொடுக்கும் பானமான சூப் பார்க்கப்படுகின்றது.

இதனை பல வகைகளில் பல வகையான பொருட்களை கொண்டு உருவாக்க முடியும். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்.

சமைத்து சாப்பிடும் உணவுகளை விட உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் போன்றவை சூப் அதிகம் தருவதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாப்பாடு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளர்களுக்கு மற்றைய உணவுகளை விட இது அதிக சக்தியை கொடுக்கக்கூடியது.

இதனை தொடர்ந்து பசி குறையாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பரான உணவு என்றே கூற வேண்டும். காரணம் உணவின் மூலமான மன நிறைவை தரக்கூடியது.

அந்தவகையில் சூப்பை பருகுவதால ஏற்படும் நன்மைகள் மற்றும் இதிலிருக்கும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வோம்.

சூப் அருந்தினால் அதிகளவு பசி எடுக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பை தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சூப் பல வகைகள் உண்டு.உதாhரணமாக மரக்கறி சூப்,காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்தி,  உணவுக்கு ஈடானளவு ஊட்டச்சத்து கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகைகளும் உண்டு.

உடல் நலன் சார்ந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு, உணவை மென்று சாப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியானவர்களுக்கு, சூப் எளிமையான மற்றும் சத்தான மாற்று உணவாக இருக்கும். இவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்றி சூப் எடுத்துக் கொள்ள வேண்டாம்.



சரியான முறையில் சூப் தயாரிக்க சில குறிப்புகள்!

1. அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது.


2. அசைவ சூப் தயாரிக்கும்போது,  அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம்,  அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.


3. ரெடிமேட் சூப் வீட்டில் தயாரிக்கும் சூப் அளவுக்கு  ஆரோக்கியமானவையல்ல. ரெடிமேட் சூப் பவுடர்களில், நறுமணத்துக்காகவும் நிறத்துக்காகவும் நிறைய பொருள்களும் நிறமிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். கூடவே உப்புச்சத்து, கலோரி போன்றவையும் அளவுக்கு அதிகமாகவோ ஃ மிகக்குறைவாகவோ இருக்கும்.



எந்த வேளையில், என்ன வகை சூப்பை அருந்துகிறோம் என்ற தெளிவுடன் குடிப்பவர்களுக்கு நிச்சயம் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்தத் தெளிவு இல்லாமல் க்ரீமி சூப்பை உணவுக்கு முன் அருந்துவது, சௌடர் சூப் குடித்தபின் பலமான உணவு உட்கொள்வதெல்லாம் ஆரோக்கியக் கேட்டுக்கே வழிவகுக்கும்.

உடல் எடை குறைக்க வேண்டியோ அல்லது வேறு ஏதேனும் உடல் நல மாற்றங்களுக்காகவோ சூப் குடிப்பவர்கள் நிபுணர் ஆலோசனையின்றி சூப் உட்கொள்ளக் கூடாது' என்பது மிக முக்கியமான விடயமாகும்.

சூப் குடிப்பதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா பொதுவாக எமது உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களை ஓரே தடவையில் கொடுக்கும் பானமான சூப் பார்க்கப்படுகின்றது.இதனை பல வகைகளில் பல வகையான பொருட்களை கொண்டு உருவாக்க முடியும். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்.சமைத்து சாப்பிடும் உணவுகளை விட உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் போன்றவை சூப் அதிகம் தருவதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சாப்பாடு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளர்களுக்கு மற்றைய உணவுகளை விட இது அதிக சக்தியை கொடுக்கக்கூடியது.இதனை தொடர்ந்து பசி குறையாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பரான உணவு என்றே கூற வேண்டும். காரணம் உணவின் மூலமான மன நிறைவை தரக்கூடியது.அந்தவகையில் சூப்பை பருகுவதால ஏற்படும் நன்மைகள் மற்றும் இதிலிருக்கும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வோம்.சூப் அருந்தினால் அதிகளவு பசி எடுக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சூப்பை தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சூப் பல வகைகள் உண்டு.உதாhரணமாக மரக்கறி சூப்,காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்தி,  உணவுக்கு ஈடானளவு ஊட்டச்சத்து கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகைகளும் உண்டு.உடல் நலன் சார்ந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு, உணவை மென்று சாப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியானவர்களுக்கு, சூப் எளிமையான மற்றும் சத்தான மாற்று உணவாக இருக்கும். இவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்றி சூப் எடுத்துக் கொள்ள வேண்டாம்.சரியான முறையில் சூப் தயாரிக்க சில குறிப்புகள்1. அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது.2. அசைவ சூப் தயாரிக்கும்போது,  அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம்,  அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.3. ரெடிமேட் சூப் வீட்டில் தயாரிக்கும் சூப் அளவுக்கு  ஆரோக்கியமானவையல்ல. ரெடிமேட் சூப் பவுடர்களில், நறுமணத்துக்காகவும் நிறத்துக்காகவும் நிறைய பொருள்களும் நிறமிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். கூடவே உப்புச்சத்து, கலோரி போன்றவையும் அளவுக்கு அதிகமாகவோ ஃ மிகக்குறைவாகவோ இருக்கும்.எந்த வேளையில், என்ன வகை சூப்பை அருந்துகிறோம் என்ற தெளிவுடன் குடிப்பவர்களுக்கு நிச்சயம் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்தத் தெளிவு இல்லாமல் க்ரீமி சூப்பை உணவுக்கு முன் அருந்துவது, சௌடர் சூப் குடித்தபின் பலமான உணவு உட்கொள்வதெல்லாம் ஆரோக்கியக் கேட்டுக்கே வழிவகுக்கும். உடல் எடை குறைக்க வேண்டியோ அல்லது வேறு ஏதேனும் உடல் நல மாற்றங்களுக்காகவோ சூப் குடிப்பவர்கள் நிபுணர் ஆலோசனையின்றி சூப் உட்கொள்ளக் கூடாது' என்பது மிக முக்கியமான விடயமாகும்.

Advertisement

Advertisement

Advertisement