பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கட்சியாக எங்களுடைய கட்சி காணப்படுகிறது.
பாராளுமன்றின் பணிகள் என்னவென்று, ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சியாகிய எங்களுக்கு தெரியவேண்டும்.
எனவே பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் நீங்கள் நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடித்து எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.
இன்றைய பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற நிலைமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
ஆகவே பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
முன்னைய அரசாங்கத்தில் எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. நாங்கள் பேசியிருந்தோம்.
ஆகவே சிறிய கட்சிப்பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இடம் வழங்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார்.
சிறிய கட்சிகளுக்கு இடம் வேண்டும்; சபையில் இடித்துரைத்த கஜேந்திரகுமார் எம்.பி. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்தார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கட்சியாக எங்களுடைய கட்சி காணப்படுகிறது. பாராளுமன்றின் பணிகள் என்னவென்று, ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சியாகிய எங்களுக்கு தெரியவேண்டும். எனவே பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் நீங்கள் நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடித்து எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். இன்றைய பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற நிலைமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். ஆகவே பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். முன்னைய அரசாங்கத்தில் எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. நாங்கள் பேசியிருந்தோம். ஆகவே சிறிய கட்சிப்பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இடம் வழங்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார்.