• May 20 2024

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததில்லை- சபையில் விளாசிய பெண் எம்.பி! SamugamMedia

Sharmi / Mar 8th 2023, 2:49 pm
image

Advertisement

கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்த காலத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்த பெண்களை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான செயன்முறையை கூட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது மகளீர் தின வாழ்த்துகளை தெரிவித்திருந்த பின்னர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

இன்று பெண்கள் தொடர்பாக பல விடயங்களை பேசுவதாகவும் ஆனால் அன்று இந்த அரசாங்கம் வெளிநாட்டு பெண்களுக்காக என்ன செய்தார்கள் என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

பெண்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் பெண்களுக்கெதிரான துஸ்பிரயோககளை தடுப்பது தொடர்பான வழிமுறைகளை இந்த உயரிய சபையில் இருந்து முன்னெடுப்பதே சாலச்சிறந்தது என்றும் தலதா அதுகோரல குறிப்பிடுகின்றார்.

ஆனால் இந்த உயரிய சihயில் திஸ்ஸ குட்டியாராச்சி என்ற உறுப்பினர் பெண் உறுப்பினரை தகாத வார்தைகளினால் திட்டியிருந்ததாகவும் நேற்று மன்தினமும் இந்த பெண் உறுப்பினர் அவ்வாறான நிலையினை எதிர்கொண்டிருந்தாக தலதா அதுகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டங்களை உருவாக்குகின்ற இந்த உயரிய சபையில் கூட பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பய்களிப்பு வழங்குவது பெண்களே என்றும் இன்று எந்த துறையினை எடுத்துப்பார்த்தாலும் அதிகமான இடங்களில் பெண்களின் பங்களிப்பும் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளதாக தலதா அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததில்லை- சபையில் விளாசிய பெண் எம்.பி SamugamMedia கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்த காலத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்த பெண்களை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான செயன்முறையை கூட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல குற்றம் சுமத்தியிருந்தார்.இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது மகளீர் தின வாழ்த்துகளை தெரிவித்திருந்த பின்னர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.இன்று பெண்கள் தொடர்பாக பல விடயங்களை பேசுவதாகவும் ஆனால் அன்று இந்த அரசாங்கம் வெளிநாட்டு பெண்களுக்காக என்ன செய்தார்கள் என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.பெண்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் பெண்களுக்கெதிரான துஸ்பிரயோககளை தடுப்பது தொடர்பான வழிமுறைகளை இந்த உயரிய சபையில் இருந்து முன்னெடுப்பதே சாலச்சிறந்தது என்றும் தலதா அதுகோரல குறிப்பிடுகின்றார்.ஆனால் இந்த உயரிய சihயில் திஸ்ஸ குட்டியாராச்சி என்ற உறுப்பினர் பெண் உறுப்பினரை தகாத வார்தைகளினால் திட்டியிருந்ததாகவும் நேற்று மன்தினமும் இந்த பெண் உறுப்பினர் அவ்வாறான நிலையினை எதிர்கொண்டிருந்தாக தலதா அதுகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.சட்டங்களை உருவாக்குகின்ற இந்த உயரிய சபையில் கூட பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பய்களிப்பு வழங்குவது பெண்களே என்றும் இன்று எந்த துறையினை எடுத்துப்பார்த்தாலும் அதிகமான இடங்களில் பெண்களின் பங்களிப்பும் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளதாக தலதா அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement