• May 17 2024

யாழில் பரபரப்பு..! வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயது சிறுமி சடலமாக மீட்பு! samugammedia

Chithra / Jul 23rd 2023, 8:21 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த நான்கு மாதங்களாக சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள குறித்த வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணி புரிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமியை பார்க்க யாரும் வரக்கூடாது என்று தெரிவித்த வீட்டு உரிமையாளர் மாதத்தில் ஒரு முறை மாத்திரம் கதைக்கமுடியுமென தெரிவித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுவதுடன் இவ் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சடலத்தை பார்வையிட்ட தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

யாழில் பரபரப்பு. வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயது சிறுமி சடலமாக மீட்பு samugammedia யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு மாதங்களாக சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள குறித்த வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணி புரிந்துள்ளார்.இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சிறுமியை பார்க்க யாரும் வரக்கூடாது என்று தெரிவித்த வீட்டு உரிமையாளர் மாதத்தில் ஒரு முறை மாத்திரம் கதைக்கமுடியுமென தெரிவித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுவதுடன் இவ் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.சடலத்தை பார்வையிட்ட தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement