• May 17 2024

ஆடு படம் போட்டு மெஸ்ஸியை பாராட்டுகிறார்களே!! ஏன் தெரியுமா?

crownson / Dec 19th 2022, 2:48 pm
image

Advertisement

கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது.

ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவந்தது.

அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.

இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மெஸ்ஸி இருந்தார் என்பதும் கூடுதல் சிறப்பு.

மேலும், உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

இதன் மூலம், கட்டார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார்.

2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL  விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைவரும்,  #Messi ஆடு என பதிவிடுகின்றனர்.

இது ஏன் என புதிதாக கால்பந்து பார்க்கும் அனைவரும் மண்டையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.

சமகாலம் மட்டுமின்றி வரலாற்றில் மிகச் சிறந்தவர் என்பதை குறிக்கும் Greatest Of All Time ன் சுருக்கமே GOAT  என சமூகவலைதளங்களில் அழைக்கப்படுகிறது.

அந்த GOAT  என்ற சொல் ஆங்கிலத்தில் ஆடு என பொருள்படுவதால் ஆடு படம் பயன்படுத்தி அவரை வாழ்த்துகின்றனர்.

ஆடு படம் போட்டு மெஸ்ஸியை பாராட்டுகிறார்களே ஏன் தெரியுமா கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது. ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவந்தது. அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மெஸ்ஸி இருந்தார் என்பதும் கூடுதல் சிறப்பு. மேலும், உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம், கட்டார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார். 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL  விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி.இந்நிலையில் சமூகவலைதளங்களில் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அனைவரும்,  #Messi ஆடு என பதிவிடுகின்றனர். இது ஏன் என புதிதாக கால்பந்து பார்க்கும் அனைவரும் மண்டையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.சமகாலம் மட்டுமின்றி வரலாற்றில் மிகச் சிறந்தவர் என்பதை குறிக்கும் Greatest Of All Time ன் சுருக்கமே GOAT  என சமூகவலைதளங்களில் அழைக்கப்படுகிறது. அந்த GOAT  என்ற சொல் ஆங்கிலத்தில் ஆடு என பொருள்படுவதால் ஆடு படம் பயன்படுத்தி அவரை வாழ்த்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement