• Sep 28 2024

புதுக்குடியிருப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

Tamil nila / Sep 27th 2024, 10:34 pm
image

Advertisement

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், நேற்றையதினம்  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.


தியாக தீபம் திலீபனின்  உருவ படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.



வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.



தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


புதுக்குடியிருப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், நேற்றையதினம்  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது.தியாக தீபம் திலீபனின்  உருவ படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement