• Nov 22 2024

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக தெரிவு இரத்து...! எந்தவொரு கட்டளைகளும் வழங்கப்படவில்லை-சட்டத்தரணி துஷ்யந்தன் தெரிவிப்பு...!

Sharmi / Mar 11th 2024, 4:07 pm
image

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாக தெரிவு ரத்து செய்தமை தொடர்பில் தங்களுக்கு எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை என கோயில் நிருவாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின்  நிர்வாக தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (11)விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2023ம் ஆண்டின்  நிர்வாக தெரிவில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நான்,  தற்போது திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இதனை ரத்துச் செய்ய கோரிய மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் எமக்கு இது தொடர்பான எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ மாவட்ட நீதிமன்ற நீதவானால் வழங்கப்படவில்லை.

இருந்த போதிலும் நீதிமன்றம் ஊடாக மாவட்ட நீதிமன்ற நீதவான் உள்ளிட்ட குழுவினர் கோயிலின் அலுவலகத்துக்கு கடந்த 07.03.2024 அன்று மாலை சென்று பிரதம குருக்கள் ,ஊழியர்களிடம் புதிய  நிர்வாகிகள் இவர்கள் தான் என கூறிவிட்டு சென்றுள்ளார்கள்.

அங்கு ஆலயத்துக்கு சொந்தமான பல பெறுமதிமிக்க பொருட்களும் காணப்படுகின்றன. இதனை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்.  இது தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.

அத்துமீறிய உள் நுழைவு தொடர்பில் வன்மையாக  இதனை கண்டிக்கிறோம்.  இருந்த போதிலும் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு தொடர்பிலும் முகங்கொடுக்கவுள்ளோம் என்றார்.


திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக தெரிவு இரத்து. எந்தவொரு கட்டளைகளும் வழங்கப்படவில்லை-சட்டத்தரணி துஷ்யந்தன் தெரிவிப்பு. திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாக தெரிவு இரத்து செய்தமை தொடர்பில் தங்களுக்கு எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை என கோயில் நிருவாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார்.திருக்கோணேஸ்வர ஆலயத்தின்  நிர்வாக தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (11)விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,2023ம் ஆண்டின்  நிர்வாக தெரிவில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நான்,  தற்போது திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இதனை இரத்துச் செய்ய கோரிய மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எமக்கு இது தொடர்பான எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ மாவட்ட நீதிமன்ற நீதவானால் வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் நீதிமன்றம் ஊடாக மாவட்ட நீதிமன்ற நீதவான் உள்ளிட்ட குழுவினர் கோயிலின் அலுவலகத்துக்கு கடந்த 07.03.2024 அன்று மாலை சென்று பிரதம குருக்கள் ,ஊழியர்களிடம் புதிய  நிர்வாகிகள் இவர்கள் தான் என கூறிவிட்டு சென்றுள்ளார்கள். அங்கு ஆலயத்துக்கு சொந்தமான பல பெறுமதிமிக்க பொருட்களும் காணப்படுகின்றன. இதனை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்.  இது தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துமீறிய உள் நுழைவு தொடர்பில் வன்மையாக  இதனை கண்டிக்கிறோம்.  இருந்த போதிலும் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு தொடர்பிலும் முகங்கொடுக்கவுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement