• May 20 2024

திருமலையில் பரபரப்பு சம்பவம் - மதுபோதையில் பௌத்த கொடியை அகற்றியவருக்கு ஏற்பட்ட கதி samugammedia

Chithra / Aug 15th 2023, 4:31 pm
image

Advertisement

திருகோணமலை நெல்சன் சினிமா திரையரங்கிற்கு அருகில் அரச மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பௌத்த கொடிகளை அகற்றியதுடன் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிக்குள் உள் நுழைந்த  குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (15)  பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உப்புவெளி-ஆனந்தபுரி முதலாவது ஒழுங்கையில் வசித்து வரும் 45 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவது,

திருகோணமலை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்சன் சினிமா திரையரங்குக்கு முன்னால் உள்ள காணியில்  பெரும்பான்மை இனத்தவர்களினாலும், வெளிநாட்டு பௌத்த துறவிகளினாலும் பிரித் ஓதப்பட்டு கொடிகள் கட்டப்பட்டது.


இந்நிலையில் இன்றைய தினம் மது போதையில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான  குறித்த பகுதிக்குள் உள் நுழைந்து கொடிகளை அகற்ற முற்பட்ட போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் மூன்று சிறுவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக இவர் மது அருந்தி வருவதாகவும் மது போதையிலேயே இக்கொடிகளை அகற்றி இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

ஆனாலும் திருகோணமலை துறைமுக பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.

திருமலையில் பரபரப்பு சம்பவம் - மதுபோதையில் பௌத்த கொடியை அகற்றியவருக்கு ஏற்பட்ட கதி samugammedia திருகோணமலை நெல்சன் சினிமா திரையரங்கிற்கு அருகில் அரச மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பௌத்த கொடிகளை அகற்றியதுடன் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிக்குள் உள் நுழைந்த  குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று (15)  பிற்பகல் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உப்புவெளி-ஆனந்தபுரி முதலாவது ஒழுங்கையில் வசித்து வரும் 45 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து தெரிய வருவது,திருகோணமலை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்சன் சினிமா திரையரங்குக்கு முன்னால் உள்ள காணியில்  பெரும்பான்மை இனத்தவர்களினாலும், வெளிநாட்டு பௌத்த துறவிகளினாலும் பிரித் ஓதப்பட்டு கொடிகள் கட்டப்பட்டது.இந்நிலையில் இன்றைய தினம் மது போதையில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான  குறித்த பகுதிக்குள் உள் நுழைந்து கொடிகளை அகற்ற முற்பட்ட போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் மூன்று சிறுவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக இவர் மது அருந்தி வருவதாகவும் மது போதையிலேயே இக்கொடிகளை அகற்றி இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.ஆனாலும் திருகோணமலை துறைமுக பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement