திருவள்ளுவர் குரு பூசை தினமான இன்று வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது,
திருவள்ளுவர் தொடர்பான நினைவு பேருரையினை பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை செயலாளர் பாலகிருபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், முன்னாள் நகரசபை உறுப்பினர் சுமந்திரன், முன்னாள் கிராம உத்தியோகத்தர் விஜயகுமார், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் லம்போதரன், நகரசபை ஊழியர்கள், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு திருவள்ளுவர் குரு பூசை தினமான இன்று வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றுள்ளது.இதன்போது திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது, திருவள்ளுவர் தொடர்பான நினைவு பேருரையினை பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை செயலாளர் பாலகிருபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், முன்னாள் நகரசபை உறுப்பினர் சுமந்திரன், முன்னாள் கிராம உத்தியோகத்தர் விஜயகுமார், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் லம்போதரன், நகரசபை ஊழியர்கள், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.