• May 11 2024

இலங்கையர்களுக்கு கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்! நாளை சந்திர கிரகணத்தை காணலாம்..! samugammedia

Chithra / Oct 27th 2023, 3:17 pm
image

Advertisement

4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது.

இச்சந்திர கிரணகம் நாளை ஒக்டோபர் 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் மேற்கு பசிபிக் பெருங்கடல், அவுஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.

மேலும் நிலவின் பிரகாசம் மற்றும் நிறத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மையம் தெரிவித்துள்ளது.

சூரியன், சந்திரனுக்கிடையில் பூமி வரும்போதும், மூன்றும் ஒரே திசையில் வரும்போது பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

முழு நிலாவும் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலில் வரும்போது மட்டுமே பகுதி சந்திர கிரகணமும் நிகழும் என்று ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

பகுதி சந்திரகிரகணம் இலங்கை நேரப்படி ஒக்டோபர் 28 ஆம் திகதி 23.31 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பகுதி சந்திர கிரகணம் அக்டோபர் 29 அதிகாலை 01.05 மணிக்கும், அதிகபட்ச சந்திர கிரகணம் 29 அதிகாலை 01.44 மணிக்கு 05 வினாடிகளிலும் தெரியும்.

பகுதி சந்திர கிரகணத்தின் முடிவு 29 அதிகாலை 2.22 மணிக்கு நிகழும் என்றும், பெனும்பிரல் சந்திர கிரகணம் அதிகாலை 03.56 25 வினாடிகளுக்கு நிகழும் என்றும் ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.


இலங்கையர்களுக்கு கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம் நாளை சந்திர கிரகணத்தை காணலாம். samugammedia 4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது.இச்சந்திர கிரணகம் நாளை ஒக்டோபர் 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.இதன்பிரகாரம் மேற்கு பசிபிக் பெருங்கடல், அவுஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.மேலும் நிலவின் பிரகாசம் மற்றும் நிறத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மையம் தெரிவித்துள்ளது.சூரியன், சந்திரனுக்கிடையில் பூமி வரும்போதும், மூன்றும் ஒரே திசையில் வரும்போது பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.முழு நிலாவும் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலில் வரும்போது மட்டுமே பகுதி சந்திர கிரகணமும் நிகழும் என்று ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.பகுதி சந்திரகிரகணம் இலங்கை நேரப்படி ஒக்டோபர் 28 ஆம் திகதி 23.31 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.பகுதி சந்திர கிரகணம் அக்டோபர் 29 அதிகாலை 01.05 மணிக்கும், அதிகபட்ச சந்திர கிரகணம் 29 அதிகாலை 01.44 மணிக்கு 05 வினாடிகளிலும் தெரியும்.பகுதி சந்திர கிரகணத்தின் முடிவு 29 அதிகாலை 2.22 மணிக்கு நிகழும் என்றும், பெனும்பிரல் சந்திர கிரகணம் அதிகாலை 03.56 25 வினாடிகளுக்கு நிகழும் என்றும் ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement