• May 03 2024

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் பின்னணி இதுதான்..! பகிரங்கப்படுத்திய எம்.வி.சுப்பிரமணியம்...!samugammedia

Sharmi / Sep 2nd 2023, 4:34 pm
image

Advertisement

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எவ்வாறு இருந்தாலும் சீனாவினுடைய வருகை மற்றும் சீனாவினுடைய நடமாட்டம் குறித்து மீனவர்கள் ஆகிய நாங்கள் பல தடவைகள் இந்தியாவிற்கு நாங்கள் தெரியப்படுத்தி இருக்கின்றோம் என வடக்கு மாகாண கடன் தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் தேசியக்கொடியுடன் சீனக் கப்பல்கள் மற்றும் தாய்வான் கப்பல்கள் பல வருடங்களுக்கு முன்னர் இங்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. அதையும் நாங்கள் தெரியப்படுத்தி இருந்தோம்.

இன்று மெது மெதுவாக வளர்ந்து அவர்களுடைய ஆய்வுக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் இங்கே வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசாங்கமும் அவர்களிடம் கூடுதலான கடனைப் பெற்று கடன் சுமையோடு இருப்பதனால், சீனாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்களது கேட்பதற்கு எல்லாம் இணங்கி கொடுப்பதனால் இலங்கை - சீனவின் பக்கம் திரும்பி விடுமோ என்ற ஒரு அச்சத்திலே அல்லது சீனாவுடன் சேர்ந்து தமக்கு எதிரியாகி விடுமோ என்ற அச்சத்திலே தான் இந்தியாவில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் வருகின்றார் என்பதை தான் நாங்கள் உணர்கின்றோம்.

எனவே அவருடைய இந்த விஜயமானது கண்டிப்பாக இடம்பெறும் எனத்தான் நான் எதிர்பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் பின்னணி இதுதான். பகிரங்கப்படுத்திய எம்.வி.சுப்பிரமணியம்.samugammedia இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எவ்வாறு இருந்தாலும் சீனாவினுடைய வருகை மற்றும் சீனாவினுடைய நடமாட்டம் குறித்து மீனவர்கள் ஆகிய நாங்கள் பல தடவைகள் இந்தியாவிற்கு நாங்கள் தெரியப்படுத்தி இருக்கின்றோம் என வடக்கு மாகாண கடன் தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையின் தேசியக்கொடியுடன் சீனக் கப்பல்கள் மற்றும் தாய்வான் கப்பல்கள் பல வருடங்களுக்கு முன்னர் இங்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. அதையும் நாங்கள் தெரியப்படுத்தி இருந்தோம். இன்று மெது மெதுவாக வளர்ந்து அவர்களுடைய ஆய்வுக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் இங்கே வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.இலங்கை அரசாங்கமும் அவர்களிடம் கூடுதலான கடனைப் பெற்று கடன் சுமையோடு இருப்பதனால், சீனாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்களது கேட்பதற்கு எல்லாம் இணங்கி கொடுப்பதனால் இலங்கை - சீனவின் பக்கம் திரும்பி விடுமோ என்ற ஒரு அச்சத்திலே அல்லது சீனாவுடன் சேர்ந்து தமக்கு எதிரியாகி விடுமோ என்ற அச்சத்திலே தான் இந்தியாவில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் வருகின்றார் என்பதை தான் நாங்கள் உணர்கின்றோம்.எனவே அவருடைய இந்த விஜயமானது கண்டிப்பாக இடம்பெறும் எனத்தான் நான் எதிர்பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement