• May 12 2024

இலங்கையில் இப்படியும் சம்பவம்..! கொள்ளையிட்ட தொலைக்காட்சி பெட்டியை மயானத்தில் புதைத்த திருடன்! samugammedia

Chithra / Jun 19th 2023, 3:42 pm
image

Advertisement

அக்கரைப்பற்று 8 பிரிவின் பழைய ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில், கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி புதைக்கப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று பொதுமயானத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (19)  நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீட்டில் இருந்த ஜந்தரை பவுன் தாலி மற்றும் பெறுமதியான தொலைக்காட்சி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரின் தந்தையினால் பொலிஸாரிடம் இன்றைய தினம்  காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட தொலைக்காட்சி பெட்டி மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்களான கணவனும் மனைவியும் வெளியூரில்  தொழிலின் நிமித்தம் வாழ்ந்துவரும் நிலையில், வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் நடைபெறுள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த வீட்டின் முன்னால் வசித்துவரும் வீட்டு உரிமையாளரின் தந்தை வழமைபோன்று வீட்டினை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்றவேளையிலேயே ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். 


இதன் பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோதே மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலி உள்ளிட்ட தொலைக்காட்சி பெட்டியும் திருடப்பட்டுள்ளதை அறிந்து பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணையினை ஆரம்பித்ததுடன் விசேட தடயவியல் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.

இதேநேரம் அக்கரைப்பற்று பொதுமயானத்திற்கு மரணமடைந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக சென்ற சிலர் அங்கு பெட்டி ஒன்று புதைக்கப்பட்டுள்ளதை அவதானித்து அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவலை வழங்கினர். 

இந்நிலையில்,  அங்கு விரைந்த பொலிஸார் தொலைக்காட்சி பெட்டியினை அடையாளம் காட்ட உரிமையாளரை அழைத்ததுடன் அவரும் தங்களது தொலைக்காட்சி பெட்டி என அடையாளம் காட்டியுள்ளார்.

இதனை அடுத்து மீட்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இப்படியும் சம்பவம். கொள்ளையிட்ட தொலைக்காட்சி பெட்டியை மயானத்தில் புதைத்த திருடன் samugammedia அக்கரைப்பற்று 8 பிரிவின் பழைய ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில், கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி புதைக்கப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று பொதுமயானத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (19)  நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வீட்டில் இருந்த ஜந்தரை பவுன் தாலி மற்றும் பெறுமதியான தொலைக்காட்சி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரின் தந்தையினால் பொலிஸாரிடம் இன்றைய தினம்  காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட தொலைக்காட்சி பெட்டி மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.வீட்டு உரிமையாளர்களான கணவனும் மனைவியும் வெளியூரில்  தொழிலின் நிமித்தம் வாழ்ந்துவரும் நிலையில், வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் நடைபெறுள்ளதாக அறிய முடிகின்றது.குறித்த வீட்டின் முன்னால் வசித்துவரும் வீட்டு உரிமையாளரின் தந்தை வழமைபோன்று வீட்டினை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்றவேளையிலேயே ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். இதன் பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோதே மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலி உள்ளிட்ட தொலைக்காட்சி பெட்டியும் திருடப்பட்டுள்ளதை அறிந்து பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணையினை ஆரம்பித்ததுடன் விசேட தடயவியல் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.இதேநேரம் அக்கரைப்பற்று பொதுமயானத்திற்கு மரணமடைந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக சென்ற சிலர் அங்கு பெட்டி ஒன்று புதைக்கப்பட்டுள்ளதை அவதானித்து அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவலை வழங்கினர். இந்நிலையில்,  அங்கு விரைந்த பொலிஸார் தொலைக்காட்சி பெட்டியினை அடையாளம் காட்ட உரிமையாளரை அழைத்ததுடன் அவரும் தங்களது தொலைக்காட்சி பெட்டி என அடையாளம் காட்டியுள்ளார்.இதனை அடுத்து மீட்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement