ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விட்டுச் சென்றவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் அடுத்த தேர்தலில் எந்த தரப்பில் இருந்து போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்பினருடன் கூட்டணி அமைக்க போவதில்லை.
ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மை விட்டுச் சென்றவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயுள்ளார்கள்.
அடுத்த தேர்தலில் எந்த தரப்பில் இருந்து போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். கட்சிக்குள் இளையோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாம் கிராம மட்டத்திலிருந்து மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். பொதுஜபெரமுன மீண்டும் எழுச்சி அடையும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கையாள்வது தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம்.
அதேவேளை, அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கானபுதிய வேட்புமனுக்களை கோருவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மொட்டு கட்சியை விட்டு சென்றவர்கள் இன்று அரசியலில் இருந்து மாயம்- சாகர காரியவசம் சுட்டிக்காட்டு. ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விட்டுச் சென்றவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் அடுத்த தேர்தலில் எந்த தரப்பில் இருந்து போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்பினருடன் கூட்டணி அமைக்க போவதில்லை.ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மை விட்டுச் சென்றவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயுள்ளார்கள். அடுத்த தேர்தலில் எந்த தரப்பில் இருந்து போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். கட்சிக்குள் இளையோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாம் கிராம மட்டத்திலிருந்து மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். பொதுஜபெரமுன மீண்டும் எழுச்சி அடையும்.உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கையாள்வது தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம்.அதேவேளை, அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.