• May 12 2025

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பி செல்லுங்கள் - பிரம்டன் மேயர்

Thansita / May 11th 2025, 7:37 pm
image

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் என அவர் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள் , இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது, என தெரிவித்த பிரம்டன் மேயர் 

அவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர்,இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.

தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

  

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பி செல்லுங்கள் - பிரம்டன் மேயர் கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார்.நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர் தெரிவித்தார்.இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் என அவர் தெரிவித்தார்.ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள் , இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது, என தெரிவித்த பிரம்டன் மேயர் அவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர்,இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement