உலக அன்னையர் தினத்தினை முன்னிட்டு அரும்பு நிலையம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து வெளியிட்ட வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய பேறுகால உளநலம் நூல் வெளியீடும், உலக அன்னையர் தினமும் இன்று யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். போதனா வைத்தியசாலை தாய்மார்களின் பேறுகால உளநல நிபுணர் ஞானரூபன் கவி, மற்றும் கோகிலா மகேந்திரன் கலந்துகொண்டனர்.
இதில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய பேறுகால உளநல நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, குழந்தை நல நிபுணர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள்,
மருத்துபீட மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற "பேறுகால உளநலம்" நூல் வெளியீடு உலக அன்னையர் தினத்தினை முன்னிட்டு அரும்பு நிலையம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து வெளியிட்ட வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய பேறுகால உளநலம் நூல் வெளியீடும், உலக அன்னையர் தினமும் இன்று யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். போதனா வைத்தியசாலை தாய்மார்களின் பேறுகால உளநல நிபுணர் ஞானரூபன் கவி, மற்றும் கோகிலா மகேந்திரன் கலந்துகொண்டனர்.இதில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய பேறுகால உளநல நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, குழந்தை நல நிபுணர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், மருத்துபீட மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.