• Apr 02 2025

கைது செய்யப்பட்ட நண்பனை பார்க்க சென்றவர்கள் கசிப்புடன் கைது..!

Sharmi / Oct 2nd 2024, 8:57 am
image

கிளிநொச்சியில் நீதிமன்ற பிடியாணையில் கைது செய்யப்பட்ட நண்பனை பார்க்கச் சென்ற நண்பன் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிடியாணையில் கைது செய்யப்பட்ட நபரை பார்ப்பதற்காக பரந்தன் பகுதியில் இருந்து  19 வயதுடைய இளைஞர்கள் குளிர்பான போத்தலில் குளிர்பானத்துடன் கசிப்பும் கலந்து, கைது செய்யப்பட்ட நண்பனுக்கு வழங்க முற்பட்ட வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் குளிர்பான போத்தலை பரிசோதனைக்கு உட்பட்ட வேளையில் குளிர்பான போத்தலில் இருந்து கசிப்பு துர்நாற்றம் வீசியதை அடுத்து கசிப்புடன் வருகை தந்த இரண்டு நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்றையதினம்(01) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஒரு லட்சம்  ரூபா சரீரப் பிணையில் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.




கைது செய்யப்பட்ட நண்பனை பார்க்க சென்றவர்கள் கசிப்புடன் கைது. கிளிநொச்சியில் நீதிமன்ற பிடியாணையில் கைது செய்யப்பட்ட நண்பனை பார்க்கச் சென்ற நண்பன் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிடியாணையில் கைது செய்யப்பட்ட நபரை பார்ப்பதற்காக பரந்தன் பகுதியில் இருந்து  19 வயதுடைய இளைஞர்கள் குளிர்பான போத்தலில் குளிர்பானத்துடன் கசிப்பும் கலந்து, கைது செய்யப்பட்ட நண்பனுக்கு வழங்க முற்பட்ட வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் குளிர்பான போத்தலை பரிசோதனைக்கு உட்பட்ட வேளையில் குளிர்பான போத்தலில் இருந்து கசிப்பு துர்நாற்றம் வீசியதை அடுத்து கசிப்புடன் வருகை தந்த இரண்டு நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்றையதினம்(01) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஒரு லட்சம்  ரூபா சரீரப் பிணையில் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement