• Nov 28 2024

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு ஆயிரக்கணக்கானோர் களத்தில்.!

Chithra / Oct 13th 2024, 10:51 am
image

 

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

இவர்கள் 196 நாடாளுமன்ற இடங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதனை தவிர தேசியப் பட்டியலில் இருந்து கூடுதலாக 29 ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

இதன் அடிப்படையில், மொத்தமாக 225 உறுப்பினர்கள் இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் ஆணையகத்தின் தகவல்படி, குறித்த 8,821 வேட்பாளர்களில் 5,464 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஏனையோர் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கொழும்புக்கு அடுத்தபடியாக கம்பஹாவிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு ஆயிரக்கணக்கானோர் களத்தில்.  நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.இவர்கள் 196 நாடாளுமன்ற இடங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதனை தவிர தேசியப் பட்டியலில் இருந்து கூடுதலாக 29 ஆசனங்கள் ஒதுக்கப்படும்.இதன் அடிப்படையில், மொத்தமாக 225 உறுப்பினர்கள் இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.தேர்தல் ஆணையகத்தின் தகவல்படி, குறித்த 8,821 வேட்பாளர்களில் 5,464 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஏனையோர் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், கொழும்புக்கு அடுத்தபடியாக கம்பஹாவிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement