• May 20 2024

எனக்கும் எனது குடும்பத்திற்கும் உயிர் அச்சுறுத்தல்..! – சபையில் சபாநாயகரிடம் முறையிட்ட ரொஷான்..! samugammedia

Chithra / Nov 16th 2023, 11:20 am
image

Advertisement

 


எனது 13 வருட அரசியல் வாழ்க்கையில் யாரிடம் எந்த கொடுக்கல் வாங்களிலுல் ஈடுபடவில்லை, அரச செலவில் விமானத்தில் சென்றதில்லை, மானிய எரிபொருள் வாங்கியதில்லையென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க   தெரிவித்தார்.     

இன்றைய பாராளுமன்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா கூறியதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் தன்னை அச்சுறுத்தும் விதத்தில் சம்மி சில்வா கருத்துக்களை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு தனக்கும் தனது குடும்பத்திற்கும் உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் இதன்போது சபாநாயகரிடம் முறையிட்டார்.

இதேவேளை  ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய நேற்றைய தினம் முதல் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு அமைய அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பாதுகாப்பிற்காக ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது மேலும் மூன்று பேர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


எனக்கும் எனது குடும்பத்திற்கும் உயிர் அச்சுறுத்தல். – சபையில் சபாநாயகரிடம் முறையிட்ட ரொஷான். samugammedia  எனது 13 வருட அரசியல் வாழ்க்கையில் யாரிடம் எந்த கொடுக்கல் வாங்களிலுல் ஈடுபடவில்லை, அரச செலவில் விமானத்தில் சென்றதில்லை, மானிய எரிபொருள் வாங்கியதில்லையென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க   தெரிவித்தார்.     இன்றைய பாராளுமன்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா கூறியதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் தன்னை அச்சுறுத்தும் விதத்தில் சம்மி சில்வா கருத்துக்களை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டார்.அத்தோடு தனக்கும் தனது குடும்பத்திற்கும் உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் இதன்போது சபாநாயகரிடம் முறையிட்டார்.இதேவேளை  ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய நேற்றைய தினம் முதல் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொது பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு அமைய அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே பாதுகாப்பிற்காக ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது மேலும் மூன்று பேர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement