• Jul 04 2025

உகந்தை கோவில் வளாகத்தில் மரைகளுக்கு அச்சுறுத்தல்

Chithra / Jul 3rd 2025, 11:17 am
image


உகந்தை கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை கூழங்களினால் அங்கு காணப்படும் மரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலய வளாகத்தை சுற்றி அதிகளவான மரைகள் காணப்படுகின்றன.

இம் மரைகள் அச்சூழலில் உள்ள புற்கள் மேய்தல் மற்றும்  தண்ணீர் தேவைக்காகவும் ஆலய வளாகத்திற்கு வருகை தருகின்றன.

எனினும் தற்போது பக்தர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் ஆலய வளாகத்தை சூழ பிளாஸ்டிக் பொருட்களுடன் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால்  அங்கு வரும் மரைகள் அக்குப்பைகளை  உண்பதை அவதானிக்க முடிவதுடன்  அவற்றின் உயிருக்கும் இப்பிளாஸ்டிக் பொருட்களினால் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இவ்விடயத்தில் உரிய நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.


உகந்தை கோவில் வளாகத்தில் மரைகளுக்கு அச்சுறுத்தல் உகந்தை கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை கூழங்களினால் அங்கு காணப்படும் மரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலய வளாகத்தை சுற்றி அதிகளவான மரைகள் காணப்படுகின்றன.இம் மரைகள் அச்சூழலில் உள்ள புற்கள் மேய்தல் மற்றும்  தண்ணீர் தேவைக்காகவும் ஆலய வளாகத்திற்கு வருகை தருகின்றன.எனினும் தற்போது பக்தர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் ஆலய வளாகத்தை சூழ பிளாஸ்டிக் பொருட்களுடன் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுகின்றன.இந்த குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால்  அங்கு வரும் மரைகள் அக்குப்பைகளை  உண்பதை அவதானிக்க முடிவதுடன்  அவற்றின் உயிருக்கும் இப்பிளாஸ்டிக் பொருட்களினால் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இவ்விடயத்தில் உரிய நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement