• Nov 28 2024

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம்

Chithra / Sep 10th 2024, 10:43 am
image


ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல், தேர்தல் செலவுகளை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்தும் அதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வு தகவல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (09) தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் விடயம் தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் ஏனைய தேர்தல் நிலைவரங்கள், 21 ஆம் திகதிக்கு முன்னர் செய்ய வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

கட்சிகளுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல், தேர்தல் செலவுகளை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் குறித்தும் அதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வு தகவல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (09) தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் விடயம் தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய தேர்தல் நிலைவரங்கள், 21 ஆம் திகதிக்கு முன்னர் செய்ய வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் தேர்தல் ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement