• Dec 03 2024

வவுனியாவிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் கைது!

Chithra / Jul 28th 2024, 12:15 pm
image


வவுனியா - நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கப் ரக வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் வவுனியா விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

வவுனியா விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான வாகனத்தை வவுனியா ஹொரவப்பொத்தான வீதி 6ம் கட்டை பகுதியில் வைத்து வழிமறித்த விசேட அதிரடிப்படையினர்,

குறித்த வாகனத்தில் முறையான அனுமதி ஏதும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 மாடுகளை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணம் செய்த காட்டகஸ்கிரிய பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன் வாகனத்தையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உள்ளனர்.

வவுனியாவிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் கைது வவுனியா - நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கப் ரக வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் வவுனியா விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்வவுனியா விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான வாகனத்தை வவுனியா ஹொரவப்பொத்தான வீதி 6ம் கட்டை பகுதியில் வைத்து வழிமறித்த விசேட அதிரடிப்படையினர்,குறித்த வாகனத்தில் முறையான அனுமதி ஏதும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 மாடுகளை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணம் செய்த காட்டகஸ்கிரிய பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன் வாகனத்தையும் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement