• Dec 26 2024

கிறிஸ்மஸ் தினத்தில் நடந்த துயரம் - கடலில் நீராடச் சென்ற மூவர் பரிதாப மரணம்!

Chithra / Dec 26th 2024, 7:50 am
image


அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம்  சங்கமன்கண்டி - உமிரி கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.

தாண்டியடி - உமிரி பகுதியில் 38 வயதுடைய தந்தை, 15 வயதுடைய மகன்  மற்றும் அவர்களின் உறவினரின் 18 வயதுடைய மகன்  என மூவர் கிறிஸ்மஸ் தினமான நேற்று கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் சென்றனர்.

இதன்போது அவர்கள் கடலில் நீராடினர். அவ்வேளை கடல் அலையில் சிக்கிய அவர்கள் மூவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.  

அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்மஸ் தினத்தில் நடந்த துயரம் - கடலில் நீராடச் சென்ற மூவர் பரிதாப மரணம் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.இந்தத் துயரச் சம்பவம்  சங்கமன்கண்டி - உமிரி கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.தாண்டியடி - உமிரி பகுதியில் 38 வயதுடைய தந்தை, 15 வயதுடைய மகன்  மற்றும் அவர்களின் உறவினரின் 18 வயதுடைய மகன்  என மூவர் கிறிஸ்மஸ் தினமான நேற்று கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் சென்றனர்.இதன்போது அவர்கள் கடலில் நீராடினர். அவ்வேளை கடல் அலையில் சிக்கிய அவர்கள் மூவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.  அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement