• Nov 27 2024

2025க்குள் யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்..!

Chithra / Mar 1st 2024, 4:30 pm
image

 

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ம் மார்ச்மாததத்திற்குள்  மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ்  530 கிலோவோட் காற்றாலை மின்சாரம்  1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்ட உதவிகளிற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர  நன்றி தெரிவித்துள்ளார்.

2025க்குள் யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்.  யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ம் மார்ச்மாததத்திற்குள்  மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ்  530 கிலோவோட் காற்றாலை மின்சாரம்  1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த திட்ட உதவிகளிற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர  நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement