• Apr 24 2025

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை - மூவரடங்கிய சிறப்பு விசாரணை குழு நியமனம்

Chithra / Apr 24th 2025, 9:16 am
image

 

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க அங்கம் வகிக்கின்றனர்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக சபாநாயகரால் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. 

இந்த குழு நேற்றையதினம் முதல் தடவையாக கூடி கலந்துரையாடியுள்ளது. 

இந்த குழு நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை - மூவரடங்கிய சிறப்பு விசாரணை குழு நியமனம்  சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க அங்கம் வகிக்கின்றனர்.பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக சபாநாயகரால் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு நேற்றையதினம் முதல் தடவையாக கூடி கலந்துரையாடியுள்ளது. இந்த குழு நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement