• May 17 2024

கொலை குற்றச்சாட்டு - 32 வருடங்களுக்கு பிறகு மூவருக்கு மரண தண்டனை! samugammedia

Chithra / Oct 11th 2023, 8:00 am
image

Advertisement

 


32 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் நேற்று (10) மரண தண்டனையை விதித்ததுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீரந்திடிய பிரதேசத்தில் நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் குறித்த மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிபன்ன பொலிஸார் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்து மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

இந்த வழக்கில் மூவருக்கு மரண தண்டனையும் இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 3 இலட்ச ரூபா அபராதமும் விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளி புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொலை குற்றச்சாட்டு - 32 வருடங்களுக்கு பிறகு மூவருக்கு மரண தண்டனை samugammedia  32 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் நேற்று (10) மரண தண்டனையை விதித்ததுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீரந்திடிய பிரதேசத்தில் நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் குறித்த மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் வெலிபன்ன பொலிஸார் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்து மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.இந்த வழக்கில் மூவருக்கு மரண தண்டனையும் இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 3 இலட்ச ரூபா அபராதமும் விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதேவேளை, இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளி புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement