• May 21 2024

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் மூன்று தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவம்!SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 1:31 pm
image

Advertisement

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் மூன்று தமிழ் எழுத்தாளர்களிற்கு பரிசளிப்பு நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில்  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயலாளர் நடேசன் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்தில் உள்ள சமூக மண்டாத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஈழத்து தமிழ் எழுத்தாளராக 16 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதியான விவேகானந்தனூர் சதீஸ் மற்றம் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார், சிவராசா கருணாகரன் ஆகியோருக்கு பரிசும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

  ஈழத்து தமிழ் எழுத்தாளராக 16 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதியான விவேகானந்தனூர் சதீஸினுடைய பரிசினை அவரது தாயாரான செல்லையா பவளவதி பெற்றுக்கொண்டார். அவர் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்னர் விடுதலை பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் கலந்துகொள்ளவிருந்த போதிலும், வடுவிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கலந்து கொண்டிருக்கவில்லை எனவும், அடுத்த வாரங்களில் அவர் விடுதலையாகுவார் எனவும் அவரது தாயார் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினர், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் மூன்று தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவம்SamugamMedia அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் மூன்று தமிழ் எழுத்தாளர்களிற்கு பரிசளிப்பு நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில்  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயலாளர் நடேசன் தலைமையில் இடம்பெற்றது.கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்தில் உள்ள சமூக மண்டாத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது ஈழத்து தமிழ் எழுத்தாளராக 16 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதியான விவேகானந்தனூர் சதீஸ் மற்றம் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார், சிவராசா கருணாகரன் ஆகியோருக்கு பரிசும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.  ஈழத்து தமிழ் எழுத்தாளராக 16 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதியான விவேகானந்தனூர் சதீஸினுடைய பரிசினை அவரது தாயாரான செல்லையா பவளவதி பெற்றுக்கொண்டார். அவர் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்னர் விடுதலை பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் கலந்துகொள்ளவிருந்த போதிலும், வடுவிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கலந்து கொண்டிருக்கவில்லை எனவும், அடுத்த வாரங்களில் அவர் விடுதலையாகுவார் எனவும் அவரது தாயார் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.குறித்த நிகழ்வில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினர், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement