கொழும்பு, கல்கிஸை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டுத் தப்பி ஓடிய 19 வயது முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 14 அன்று, குறித்த முச்சக்கர வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து சென்றது.அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தொடர்ந்து, விரிவான விசாரணை தொடங்கப்பட்டது.
சமூக ஊடகக் காணொளிகளையும், சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ததன் மூலம், சந்தேக நபரையும் சம்பந்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் அடையாளம் கண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இரத்மலானை, போருபானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆவார்.
அவரை இன்று (22) கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி கைது கொழும்பு, கல்கிஸை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டுத் தப்பி ஓடிய 19 வயது முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.ஏப்ரல் 14 அன்று, குறித்த முச்சக்கர வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து சென்றது.அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தொடர்ந்து, விரிவான விசாரணை தொடங்கப்பட்டது.சமூக ஊடகக் காணொளிகளையும், சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ததன் மூலம், சந்தேக நபரையும் சம்பந்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் அடையாளம் கண்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இரத்மலானை, போருபானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆவார். அவரை இன்று (22) கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.இந்தச் சம்பவம் குறித்து கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.