• Jan 13 2025

கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து; இருவர் பலி! குழந்தை உட்பட இருவர் படுகாயம்

Chithra / Jan 8th 2025, 1:02 pm
image


மாத்தளை, நாராங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பல்லேபொலவிலிருந்து நாராங்கமுவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும், பின்புறத்தில் அமர்ந்திருந்த வயோதிபரும் இரண்டு பெண்களும் குழந்தையும் படுகாயமடைந்துள்ள நிலையில்,

மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வயோதிபரும் பெண்ணொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

75 வயதுடைய வயோதிபரும், 65 வயதுடைய பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து; இருவர் பலி குழந்தை உட்பட இருவர் படுகாயம் மாத்தளை, நாராங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பல்லேபொலவிலிருந்து நாராங்கமுவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும், பின்புறத்தில் அமர்ந்திருந்த வயோதிபரும் இரண்டு பெண்களும் குழந்தையும் படுகாயமடைந்துள்ள நிலையில்,மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வயோதிபரும் பெண்ணொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.75 வயதுடைய வயோதிபரும், 65 வயதுடைய பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement