• Apr 19 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வில்லங்கம்: மூன்று பெண்கள் கைது..!

Sharmi / Apr 19th 2025, 12:10 pm
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவிற்கும் அதிகமான குஷ் கஞ்சாவை வைத்திருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலைய அதிகாரிகள் ஒரு பெண்ணிடமிருந்து 1.104 கிலோ கஞ்சாவையும், மற்றொரு பெண்ணிடமிருந்து 1.856 கிலோ கஞ்சாவையும், மூன்றாவது பெண்ணிடமிருந்து 2.288 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

25, 48 மற்றும் 50 வயதுடைய சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நேற்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை,கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வில்லங்கம்: மூன்று பெண்கள் கைது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவிற்கும் அதிகமான குஷ் கஞ்சாவை வைத்திருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலைய அதிகாரிகள் ஒரு பெண்ணிடமிருந்து 1.104 கிலோ கஞ்சாவையும், மற்றொரு பெண்ணிடமிருந்து 1.856 கிலோ கஞ்சாவையும், மூன்றாவது பெண்ணிடமிருந்து 2.288 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 25, 48 மற்றும் 50 வயதுடைய சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நேற்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை,கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement