• Nov 19 2024

திரிபோஷா உற்பத்திக்கு மீண்டும் அனுமதி..!

Chithra / May 31st 2024, 3:58 pm
image

 

ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

குறிப்பிட்ட அளவை விட அதிகமான அஃப்லொடொக்ஸின் காணப்பட்டமையால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போசாக்குக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு திரிபோஷாவைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் த்ரிபோஷாவில் காணப்படவேண்டிய அஃப்லொடொக்ஸின் அளவை 5 வரை அதிகரிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.


திரிபோஷா உற்பத்திக்கு மீண்டும் அனுமதி.  ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் தெரிவித்தார்.பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டது.குறிப்பிட்ட அளவை விட அதிகமான அஃப்லொடொக்ஸின் காணப்பட்டமையால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவின் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.போசாக்குக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு திரிபோஷாவைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால் 06 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் த்ரிபோஷாவில் காணப்படவேண்டிய அஃப்லொடொக்ஸின் அளவை 5 வரை அதிகரிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement