• Nov 22 2024

இன்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை..! இலங்கை மக்களே அவதானம் எச்சரிக்கை

Chithra / May 16th 2024, 7:30 am
image


இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், தென் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இன்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை. இலங்கை மக்களே அவதானம் எச்சரிக்கை இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேல், தென் மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement