• May 29 2025

தேசிய ரீதியில் சாதனை படைத்த திருமலை மாணவர்கள் கௌரவிப்பு..!

Sharmi / May 28th 2025, 12:40 pm
image

அகில இலங்கை ரீதியிலான அல்குர்ஆன் மனன போட்டியில் தேசிய மட்டத்தில் 2ஆம் 5ஆம் இடங்களைப் பெற்ற திருகோணமலை -தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களான எம்.எம்.அப்துல்லாஹ், என்.எம்.ஹஸ்ஸான் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம்(28) காலை இடம்பெற்றது.

இதனை மத்ரஸா நிர்வாகம் பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அல்குர்ஆன் மனனப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த இரண்டு மாணவர்களும் மாணவர்கள், பெற்றோர்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதன் பின்னர் விழா மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்று சாதனை மாணவர்கள் பொன்னாடையும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு இம்மாணவர்களுக்கு அல்குர்ஆன் போதித்து கொடுத்த மௌலவிமார்கள், தோப்பூரிலுள்ள இரண்டு முப்தி பட்டம் பெற்ற உலமாக்கள் ,மர்ஸா நிருவாகத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் கலந்து கொண்டார்.

அத்தோடு மூதூர் பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஆர்.எம்.நிம்சாத்,தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர்,நிருவாகத்தினர்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


தேசிய ரீதியில் சாதனை படைத்த திருமலை மாணவர்கள் கௌரவிப்பு. அகில இலங்கை ரீதியிலான அல்குர்ஆன் மனன போட்டியில் தேசிய மட்டத்தில் 2ஆம் 5ஆம் இடங்களைப் பெற்ற திருகோணமலை -தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களான எம்.எம்.அப்துல்லாஹ், என்.எம்.ஹஸ்ஸான் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம்(28) காலை இடம்பெற்றது.இதனை மத்ரஸா நிர்வாகம் பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது அல்குர்ஆன் மனனப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த இரண்டு மாணவர்களும் மாணவர்கள், பெற்றோர்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.இதன் பின்னர் விழா மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்று சாதனை மாணவர்கள் பொன்னாடையும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு இம்மாணவர்களுக்கு அல்குர்ஆன் போதித்து கொடுத்த மௌலவிமார்கள், தோப்பூரிலுள்ள இரண்டு முப்தி பட்டம் பெற்ற உலமாக்கள் ,மர்ஸா நிருவாகத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் கலந்து கொண்டார்.அத்தோடு மூதூர் பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஆர்.எம்.நிம்சாத்,தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர்,நிருவாகத்தினர்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement