• Nov 23 2024

இன்று சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியை நிகழ்வு..!samugammedia

Tharun / Jan 28th 2024, 5:11 pm
image

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று (28) பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதாக  வருகிறது.

இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 01.00 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதிச் சடங்குகளின் பின்னர், உடல் ஊர்வலமாக ராஜகதலுவ கத்தோலிக்க மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி காலை இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப், கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் கொள்கலன் வாகனத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்தனர்.

இதேவேளை இராஜாங்க அமைச்சரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நேற்றிரவு ஏராளமான மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடல் கண்டி – ஹதெனிய – மரவணாகொட பொது மயானத்தில் நேற்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியை நிகழ்வு.samugammedia கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று (28) பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதாக  வருகிறது.இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 01.00 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.இறுதிச் சடங்குகளின் பின்னர், உடல் ஊர்வலமாக ராஜகதலுவ கத்தோலிக்க மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 25ஆம் திகதி காலை இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப், கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் கொள்கலன் வாகனத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்தனர்.இதேவேளை இராஜாங்க அமைச்சரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நேற்றிரவு ஏராளமான மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடல் கண்டி – ஹதெனிய – மரவணாகொட பொது மயானத்தில் நேற்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement