வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரக் கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரக் கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கொழும்பிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை இருக்கும், அவ்வப்போது 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு உட்பட பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை; பலத்த காற்று தொடர்பிலும் எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரக் கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரக் கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.கொழும்பிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை இருக்கும், அவ்வப்போது 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை இருக்கும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.