• Sep 20 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு!samugammedia

Sharmi / Apr 6th 2023, 2:03 pm
image

Advertisement

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று(06) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டது.

சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் குறித்த கலந்துரையாடலில் பங்கு கொண்டு விளக்கமளித்தார்.

குறித்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சாதக பாதக நிலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வுsamugammedia பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று(06) கிளிநொச்சியில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டது.சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் குறித்த கலந்துரையாடலில் பங்கு கொண்டு விளக்கமளித்தார்.குறித்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சாதக பாதக நிலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement